search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்"

    • ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.
    • தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் .

    சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

    • எப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது.
    • வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் நடந்த கார் வெடிப்பில் நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதை கொண்டு வந்தவரே பலியாகி இருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.

    காவல்துறைக்கு தலைவராக இருப்பவரே இப்படி மவுனம் காப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழக அரசு பயங்கரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.

    எப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது. அதனால் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும். கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிற விஷயம்.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்தான் தாய்மொழி, எந்த மாநிலத்திலும் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    எந்த காலத்திலும் தமிழக மக்கள் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்தி திணிப்பை கொண்டு வந்ததால்தான் இதுவரை ஆட்சி பிடிக்க முடியாமல் போனது. அது போன்ற விபரீத முயற்சியில் பா.ஜ.க ஈடுபடாது என நினைக்கிறேன்.

    செய்தியாளர்கள் மடக்கி தான் கேள்வி கேட்பார்கள் . அதற்கு பக்குவமாகதான் பதில் சொல்ல வேண்டும் .அண்ணாமலை அரசியலுக்கு வந்து சில ஆண்டுகள் தான் ஆகிறது. அடிப்பட்டு திருந்துவார். அப்போது நிதானம் ஆகிவிடுவார். தேசிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் இதுபோன்ற போக்கை கட்சி தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து நடந்தது
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ராகவன், ஸ்டீபன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    அமைப்புச் செயலாளர் ஜெங்கின்ஸ், வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட அவை தலைவர் ஜூலியஸ்,பொருளாளர் கமலேஷ்,இணைச் செயலாளர் சவுமியா,துணைச் செயலாளர் இமாம் பாதுஷா,பொதுக்குழு உறுப்பினர் சகாயடெல்வர், ஒன்றிய செயலாளர்கள் ஜெகன் ஆனந்த், துரை சிங்கம், ஆறுமுகம், மாநகர பகுதி செய லாளர் முத்துக்குமார், அறிவழகன்,இலக்கிய அணி இணைச் செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை, மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பொது மழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் நிர்வாகிகள் கொட்டும் மழையில் நனைந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் வேலை பார்ப்பதில்லை.
    • தி.மு.க.வை வீழ்த்த கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் தேர்தல் நேரத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை தி.மு.க. நிறைவேற்றாததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தற்போது மதம், ஜாதியை வைத்து அரசியல் செய்கிறது.

    இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்கள் வாக்களிப்பதில்லை.

    சமூக நீதி பேசி வரும் தி.மு.க.வினர் மற்றும் அமைச்சர்கள் மக்களை பார்த்து ஓ.சி. பஸ் என்றும் பட்டியலினத்தவரை பார்த்து ஜாதி குறித்தும் பேசுகிறார்கள். மக்கள்தான் எஜமானார்கள். அவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    தி.மு.க.வினர் திருந்தி இருப்பார்கள் என்று மக்கள் மீண்டு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் திருந்தவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபை கூட்டத் தொடரில் நிதி நிலை அறிக்கையின் போது தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து விட்டு அமைச்சர்கள் மீது கவர்னரிடம் முறைகேடு புகார் அளித்தனர்.

    நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த உடன் தற்போது நிதி நிலையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் சுயம்பாக தோன்றிய தலைவர்கள். ஆனால் தி.மு.க.வில் தலைவர்கள் திணிக்கப்படுகிறார்கள்.

    தற்போது உள்ள அமைச்சர்களின் நடவடிக்கையால் தூக்கம் இல்லாமல் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் தூங்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நான் ஏற்கனவே கூறியது போல் 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயாளர் தட்சிணாமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் குட்வில் குமார், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அம்பத்தூர் எஸ்.வேதாசலம், பொறியாளர் அணி செயலாளர்கள் மா.கரிகாலன், அமைப்புச் செயலாளர் நேதாஜி கணேசன், மாவட்ட செயலாளர்கள் சி.பி.ராமஜெயம், ஏ.ஆர்.பழனி, பி.ஆனந்தன், எல்.ராஜேந்தி ரன், ஹஜ் கே.முகமது சித்திக், வி.சுகுமார் பாபு, கே.விதுபாலன், எஸ்.வேதாச்சலம், இ.லக்கிமுருகன், பரணி குருக்கள், அய்யப்பா வெங்கடேசன், முகவை ஜெயராமன், சூளைமேடு கங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் வேலை பார்ப்பதில்லை. அவர்களது கணவர்கள் பணி செய்கிறார்கள். அவர்கள் பொதுமக்களை மிரட்டுகிறார்கள். முதல்-அமைச்சர் மீது யாருக்கும் பயம் இல்லை.

    முதல்-அமைச்சரால் அமைச்சர்களை மட்டுமல்ல கவுன்சிலர்களை கூட கட்டுப்படுத்த முடியாது. ஜெயலலிதாவால் அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் இருந்தனர். தற்போது முதல்-அமைச்சருக்கோ அமைச்சர்களால் தூக்கம் இல்லை.

    எங்களை வெளியேற்றியதால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் தனி இயக்கம் கண்டுள்ளோம். இனிமேல் நாங்கள் ஒன்றாக இணைவது எங்களுக்கும் நல்லது அல்ல. அவர்களுக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். தி.மு.க.வை வீழ்த்த கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை அசோக்நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய அலுவலகத்தை துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்தார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை அசோக்நகர் நடேசன் சாலை போலீஸ் பயற்சி கல்லூரி அருகே 2மாடி கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர் களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பின்னர் அவர் அலுவலகத்தில் உள்ள தனது அறைக்கு சென்று கட்சி சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்வையிட்டார். அவரது அறையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா படங்கள் இருந்தன.

    முன்னதாக காரில் வந்த தினகரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் டி.டி.வி.தினகரன், தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-


    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று அமோக வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் மக்களின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும் நம்மிடமே உள்ளது.

    இன்று தமிழகத்தில் துரோகிகள் ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் துரோகிகளை விரட்டி அடிப்போம். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவோம். அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்.

    தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது இப்போதுள்ள துரோகிகள் யாரையும் கட்சியில் சேர்க்கமாட்டோம்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு அலுவலகம் தேவை என்பதை உணர்ந்து இடத்தை தேடிக்கொண்டு இருந்தோம். 2 மாதத்துக்கு முன்பு இந்த இடத்தை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா வழங்கினார். இந்த இடம் போதுமானதாக உள்ளது.

    இங்கிருந்து நாம் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளோம். விரைவில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம். தமிழக மக்களுக்கு நல்லாட்சி தருவோம்.

    தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் திராணியற்ற முதல்-அமைச்சராக எடப்பாடி உள்ளார். சட்டசபையில் தூத்துக்குடி போராட்டத்தை அடக்கி விட்டோம் என்று பெருமைபட பேசுகிறார்.

    சுயநலத்துக்காக துரோக செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்களை தமிழக மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் இதற்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்

    இரட்டை இலை சின்னத்தை மீண்டும் மீட்டெடுப்போம். புரட்சித்தலைவி ஆட்சியை மீண்டும் அமைப்போம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வெற்றி பெறுவோம். மீண்டும் கோட்டைக்குள் செல்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் இசக்கி சுப்பையா, பழனியப்பன், செந்தில்பாலாஜி, செந்தமிழன், நிர்வாகிகள் கலைராஜன், சந்தான கிருஷ்ணன். அம்பத்தூர் பகுதி செயலாளர் கே.எஸ். வேதாசலம், டி.ஈஸ்வரன், துறைமுக பகுதி செயலாளர் இ.பி.பாண்டியன், சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி பகுதி செயலாளர் எல்.ராஜேந்திரன், தென் சென்னை எஸ்.கே.துரைராஜ், அண்ணாநகர் என்.எஸ்.விஜயன், ஏ.பி.சாகுல்அமீது, துருக்கி ரபீக்ராஜா, சி.பி. ராமஜெயம், கனகராஜ், அப்பாஸ், அபிராமி ஜி.பாலாஜி, கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×