இந்தியா

தெலுங்கானாவில் வீட்டிற்கு வெளியே தூங்கிய பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் வெட்டி கொலை

Published On 2024-05-24 05:26 GMT   |   Update On 2024-05-24 05:26 GMT
  • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், லஷ்மி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் ரெட்டி (வயது 55). இவர் சந்திரசேகர ராவின் பி.ஆர். எஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் ரெட்டி வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஸ்ரீதர் ரெட்டியை கோடாரியால் சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஸ்ரீதர் ரெட்டி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஸ்ரீதர் ரெட்டியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதர் ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை கொலை செய்யப்பட்டதற்கு உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டினர். ஆனால் குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News