இந்தியா

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம்

Published On 2026-03-01 15:45 IST   |   Update On 2026-03-01 15:45:00 IST
  • ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைமையை படுகொலை செய்வது வெறுக்கத்தக்கது.
  • அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் வளைகுடாவில் உள்ள நாடுகள் மீதும், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மக்களவை எம்.பி. பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைமையை, ஜனநாயக உலகின் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் குறிவைத்து படுகொலை செய்வதும், ஏராளமான அப்பாவி மக்களைக் கொல்வதும் வெறுக்கத்தக்கது. மேலும் அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

பல நாடுகள் இப்போது மோதலில் இழுக்கப்பட்டிருப்பது துயரமானது. உலகத்திற்கு அமைதி தேவை. தேவையற்ற அதிகாமான போர் அல்ல. இதற்குப் பொறுப்பானவர்கள் மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது: கண்ணுக்குக் கண் என்பது உலகம் முழுவதையும் குருடாக்கும்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் பாதுகாப்பாக கொண்டுவர நமது பிரதமர் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News