இந்தியா

தெலுங்கானாவில் வழித்தவறி வந்த 16 வயது சிறுமி பலாத்காரம்- வாடகை பைக் டிரைவர் கைது

Published On 2024-05-24 05:05 GMT   |   Update On 2024-05-24 05:05 GMT
  • சிறுமியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து மகளை அழைத்துச் சென்று துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர்.
  • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சந்திப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்தனர்.

இதனால் விரக்தி அடைந்த சிறுமி திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியேறினார். எங்கு செல்வது என தெரியாமல் சிறுமி கால் போன போக்கில் சென்றார்.

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டாவை சேர்ந்தவர் சந்திப் (வயது 28). இவர் செகந்திராபாத்தில் வாடகை பைக் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் அழுதபடி சென்ற சிறுமியை பார்த்த சந்திப் தன்னுடன் வருமாறு சிறுமியை அழைத்தார். ஆனால் சிறுமி சந்திப்புடன் செல்ல மறுத்தார்.

இருப்பினும் சந்திப் சிறுமியிடம் நைசாக பேசி காச்சிகுடாவிற்கு அழைத்துச் சென்றார்.

அங்குள்ள தங்கும் விடுதியில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

மகள் வீட்டில் இல்லாததால் அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் மகள் காணாமல் போனது குறித்து துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அந்த வழியாக வந்த ஒருவரிடம் செல்போனை வாங்கி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

சிறுமியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து மகளை அழைத்துச் சென்று துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சந்திப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News