இந்தியா

வங்கதேசத்தின் புதிய பிரதமர் பதவியேற்பு விழா- இந்தியா சார்பில் ஓம் பிர்லா பங்கேற்பு

Published On 2026-02-15 17:41 IST   |   Update On 2026-02-15 17:41:00 IST
  • தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.
  • பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024ம் ஆண்டில் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வங்கதேசத்தில் முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. இதில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.

இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தமாக இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்தார்.

இந்நிலையில், வங்கதேசத்தின் புதிய பிரதமராக தேர்வான தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அன்றைய நாள் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வரவுள்ளதால், பிரதமர் மோடியால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News