இந்தியா

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரும் திங்கட்கிழமை இந்தியா வருகிறார்

Published On 2026-02-15 01:57 IST   |   Update On 2026-02-15 01:57:00 IST
  • அதிபர் மேக்ரான் பிரான்சில் இருந்து 16-ம் தேதி இந்தியா வருகிறார்.
  • 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி:

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் திங்கட்கிழமை இந்தியா வருகின்றனர். அதிபர் மேக்ரான் இந்தியாவில் நடைபெறும் ஏ.ஐ. (AI Impact Summit) உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா- பிரான்ஸ் Year of Innovation-ஐ தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின், டெல்லியில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து, அதிபர் மேக்ரானின் சுற்றுப்பயணம் அமைய உள்ளது.

Tags:    

Similar News