search icon
என் மலர்tooltip icon

    ஜிம்பாப்வே

    • முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
    • இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வேகமாக சாய்த்தனர்.

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர்.

    இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    • தீபக் ஹூடா இந்தியாவுக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • 16 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    ஹராரே:

    நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்கள் அடித்தார். அதிபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

    அதாவது தனது அறிமுக போட்டியில் இருந்து நேற்றைய போட்டிவரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹூடா தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அதில் இருந்து இந்திய அணி ஏழு ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு தனித்துவமான சாதனையாக கருதப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணியின் அதிஷ்ட வீரராக தீபக் ஹூடா திகழ்ந்து வருகிறார்.

    இதற்கு முன்னர் ருமேனியா வீரர் சாத்விக் நடிகோட்லா, தான் அறிமுகமானதில் இருந்து 15 போட்டிகளில் அணியை வெற்றி பெற்ற சாதனையை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தனது முதல் சர்வதேச போட்டி விளையாடியதில் இருந்து 13 ஆட்டங்களில் அணியை வெற்றி பெற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ந்து 14 வெற்றியை பதிவு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து ஆடிய இந்தியா 167 ரன் எடுத்து வென்றது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் பர்ல் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ராகுல் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். இஷான் கிஷன் 6 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 25 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 13 வெற்றியை பதிவு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் விழுந்தன.

    சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினார். அவர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரியான் பர்ல் பொறுப்புடன் ஆடி 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்ல இந்தியா தீவிரம்.
    • ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுள்ளது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஹராரேவில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது.
    • இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசினார்கள்.

    ஹராரே: 

    ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்விங் மற்றும் வேகப் பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது என்றார். இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

    நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் களத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றும்  அவர் கூறினார். நாங்கள் இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, நாங்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே- இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஷிகர் தவான் 88 ரன்களும், ஷூப்மான் கில் 82 ரன்களும் விளாச, இந்தியா 30.5 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.

    • வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
    • 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிலைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் ஜிம்பாப்வே அணி சற்று நிதானமாக ஆடியது. கேப்டன் ரெஜிஸ் 35 ரன்களும், பிராட் ஈவன்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் ஜிம்பாப்வே, 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    6 மாதத்திற்கு பிறகு பார்முக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

    • ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானின் ஷஷாய், ரஹ்மதுல்லா குர்பாஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்தது.
    • ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா சட்ரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் நிஜத் மசூத் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷஷாய் 45 ரன்கள் எடுத்தார். ரஹமதுல்லா குர்பாஸ் 33 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய நஜிபுல்லா சட்ரன் 25 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

    • முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
    • ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி கோப்பையை வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் நேற்று 3வது ஒருநாள் போட்டி தலைநகர் ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 44.5 ஓவர்கள் முடிவில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிபட்சமாக அந்த அணியின் சிகந்தர் ரசா 38 ரன்கள் அடித்தார். ஆப்கான் தரப்பில் அதிபட்சமாக ரசித்கான் 3 விக்கெட்களையும், பரூக்கி, நபி தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

    பின்னர் களம் இறங்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்தது. அதிபட்சமாக கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 38 ரன்கள் அடித்தார். முகமத் நபி 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.

    ஜிம்பாப்பே அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×