search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபக் ஹூடா"

    • இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
    • முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடுகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

    முதல் டி20 போட்டி வரும் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. 2-வது டி20 போட்டி அக்டோபர் 2ம் தேதி கவுகாத்தியிலும், 3-வது டி20 போட்டி அக்டோபர் 4-ம் தேதி இந்தூரிலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக தீபக் ஹூடா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார்.

    இதேபோல், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • தீபக் ஹூடா இந்தியாவுக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • 16 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    ஹராரே:

    நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்கள் அடித்தார். அதிபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

    அதாவது தனது அறிமுக போட்டியில் இருந்து நேற்றைய போட்டிவரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹூடா தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அதில் இருந்து இந்திய அணி ஏழு ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு தனித்துவமான சாதனையாக கருதப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணியின் அதிஷ்ட வீரராக தீபக் ஹூடா திகழ்ந்து வருகிறார்.

    இதற்கு முன்னர் ருமேனியா வீரர் சாத்விக் நடிகோட்லா, தான் அறிமுகமானதில் இருந்து 15 போட்டிகளில் அணியை வெற்றி பெற்ற சாதனையை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தனது முதல் சர்வதேச போட்டி விளையாடியதில் இருந்து 13 ஆட்டங்களில் அணியை வெற்றி பெற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா தட்டிச் சென்றார்.
    • 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. யாரும் எதிர்பார்க்க முடியாத அளவில் அவர்களது பேட்டிங் இருந்தது. இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோல்வி அடைந்தது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சாம்சன் மற்றும் ஹூடா ஜோடி 87 பந்துகள் சந்தித்து 176 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை சாம்சன் - ஹூடா படைத்துள்ளது. இதற்கு முன்பு 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    டி20 தொடரில் ஓட்டு மொத்தமாக அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இவர்கள் 9-வது இடத்தை பிடித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜசாய் மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் பட்டியலில் உள்ளனர். இந்த ஜோடி அயர்லாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியில் தீபக் ஹூடா சதமடித்தார்.
    • அயர்லாந்து கேப்டன் 60 ரன்கள் குவித்தார்.

    டப்ளின்:

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து களம் இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுடன் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்ட இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது.

    சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 40 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்கள் குவித்தார்.

    ஹாரி டெக்டர் 39 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 34 ரன்களும் எடுத்தனர். வெற்றி பெற கடைசி வரை அந்த அணி வீரர்கள் போராடினர். கடைசி ஓவரில் 1 பந்துக்கு 6 ரன் தேவைப்பட்ட நிலையில், அயர்லாந்து 2 ரன் மட்டுமே எடுத்து. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 221 ரன்கள் அடித்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    • இந்தியாவின் தீபக் ஹூடா அதிரடியாக ஆடி 55 பந்துகளில் சதமடித்தார்.
    • தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்களை குவித்தது.

    டப்ளின்:

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 13 ஆக இருக்கும்போது இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்டனர்.

    சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார்.

    அயர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்குகிறது.

    • தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை.
    • தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும்.

    மும்பை:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இப்போட்டி தொடருக்கான இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா அயர்லாந்து தொடரில் ஒரு கவன ஈர்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை. இது மிகவும் கடினமான பணி. அதை ஐ.பி.எல்.லின் தீபக் ஹூடா அற்புதமாக செய்தார். அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    வறண்ட ஆடு களத்தில் முக்கியமான சூழ்நிலைகளில் தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும். அவரை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்றார்.

    ×