search icon
என் மலர்tooltip icon

    ஜிம்பாப்வே

    • முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை வீழ்த்தியது.
    • 2வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.

    ஹராரே:

    உலக கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

    முதல் ஆட்டத்தில் இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்ச தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதம் அடித்த நிசங்கா 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொறுபுடன் ஆடிய அசலங்கா அரை சதம் விளாசி 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஸ்காட்லாந்து சார்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டும், மார்க் வாட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 246 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் ஸ்காட்லாந்து அணி 29 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் அரைசதம் அடித்தார்.

    இலங்கை அணி சார்பில் மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டும், ஹசரன்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    2வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற யுஏஇ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அதிரடியில் மிரட்டியது. பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடிக்க அயர்லாந்து அணி 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் அயர்லாந்து 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து தான் ஆடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    ஏற்கனவே ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்கள் எடுத்து தோற்றது.

    ஹராரே:

    உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் ஹராரேவில் இன்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிக்கந்தர் ராசா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்னில் வெளியேறினர். ரியான் பர்ல் 50 ரன்னிலும், எர்வின் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார். ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும், நிகோலஸ் பூரன் 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.
    • நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் - மேயர்ஸ் களமிறங்கினர்.

    மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

    அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார்.

    இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து நேபாளம் அணி களமிறங்கியது. முதலில் கவுஷல் பூர்டல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி சேர்ந்தனர்.

    இதில், கவுஷல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பிம் ஷார்க்கி ஆசிப்புடன் ஜோடி சேர்ந்தார். பிம் ஷார்க்கி இரண்டே ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக ஆசிப்- ரோகித் பவுதல் விளையாடினர். இதில், ஆசிப் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து விளையாடிய வீரர்களில், ரோகித் 30 ரன்களும், கவுஷல் மல்லா 2 ரன்களும், தீப்பேந்திர சிங் 23 ரன்களும், குல்சன் ஜா 42 ரன்களும், சந்தீப் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    ஆரிப் ஷேக் அரை சதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், கரண் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    கடைசியாக களத்தில் இருந்த லலித் ராஜ்பான்ஷி பூஜ்ஜியம் ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், 101 ரன்களில் நேபாள அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

    • நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை 315 ரன்கள் குவித்தது.
    • ஜிம்பாப்வே அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

    இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட் களம் இறங்கினர்.

    இருவரும் முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் விக்ரம்ஜித் சிங் 88 ரன், மேக்ஸ் ஓ'டவுட் 59 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

    இதையடுத்து களம் இறங்கிய வெஸ்லி பாரேசி 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 83 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை 315 ரன்கள் குவித்தது.

    ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடியது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாய்லார்ட் கும்பி 40 ரன்னும், கிரேக் எர்வின் 50 ரன்னும், அடுத்து களம் இறங்கிய வெஸ்லி மாதேவேரே 10 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    இதையடுத்து களம் இறங்கிய சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா நிதானமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.

    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்ஸ் 91 ரன்னில் அவுட் ஆனார்.

    மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சிக்கந்தர் ராசா சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்தில் 102 ரன்கள் அடித்தார்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி தொடர்ச்சியாக பெற்ற 2வது வெற்றி இதுவாகும்.

    • உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
    • முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன.

    ஹராரே:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன. அந்த அணிகள் தகுதி சுற்றில் விளையாடுகிறது.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    ஜூலை 9-ந் தேதி வரை நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாளம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்று உள்ளன.

    இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக் கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். நாளைய தொடக்க ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-நேபா ளம், வெஸ்ட்இண்டீஸ்-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்தது.
    • குடகேஷ் மோடி 2 இன்னிங்சிலும் சேர்த்து 13 விக்கெட் வீழ்த்தினார்.

    புலவாயோ:

    வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மழை காரணமாக முதல் டெஸ்ட் போட்டி ரத்தானது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இன்னசென்ட் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடி 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 292 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரோஸ்டன் சேஸ் 70 ரன்னும், ரேமான் ரீபர் 53 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வேயின் விக்டர் நியாச்சி 5 விக்கெட்டும், பிராண்டன் மவுடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே 173 ரன்னில் ஆல் அவுட்டானது. கேப்டன் கிரெய்க் எர்வின் 72 ரன்னும், இன்னசென்ட் 43 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடி 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 4 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குடகேஷ் மோட்டிக்கு அளிக்கப்பட்டது.

    • ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 379 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • அந்த அணியின் கேரி பேலன்ஸ் 137 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    புலவாயோ:

    வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதமடித்து அசத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் சதமடித்து 182 ரன்னில் அவுட்டானார்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 336 ரன்கள் குவித்தது. சந்தர்பால் 207 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே தரப்பில் பிராண்டன் மவுடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேரி பேலன்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    தொடக்க ஆட்டக்காரர் இன்னசெண்ட் 67 ரன்னும், பிராண்டன் மவுடா 56 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 378 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேரி பேலன்ஸ் 137 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 8-வது விக்கெட்டுக்கு கேரி பேலன்ஸ், மவுடா ஜோடி 135 ரன்கள் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், குடாகாஷ் மோடே, ஹோலட்ர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    நான்காம் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    • முதல் நாளில் மழை குறுக்கிட்டதால் வெஸ்ட் இண்டீஸ் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர்.

    புலவாயோ:

    வெஸ்ட்இண்டீஸ் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கேப்டன் பிராத்வெயிட், சந்தர்பால் களமிறங்கினர்.

    இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 51 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 112 ரன்களைச் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. பிராத்வெயிட், சந்தர்பால் ஆகியோர் தலா 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவடைந்தது.

    • முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 276 ரன்களை எடுத்தது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில் சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் முதல் சதம் அடித்தார். அவர் 130 ரன்னில் வெளியேறினார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 40 ரன்னிலும், தவான் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் வீழ்ந்தது.

    ஆனாலும் சிக்கந்தர் ராசா தனி ஆளாகப் போராடினார். அவர் சதமடித்து அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு சிக்கந்தர் ராசா, எவான்ஸ் ஜோடி

    104 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    சிக்கந்தர் ராசா 115 ரன்னில் ஆட்டமிழந்தார். சீன் வில்லியம்ஸ் 45 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இந்தியா சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
    • ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார்.

    நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இதுவாகும்.

    அவர் 130 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

    ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
    • ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் 40 ரன்னும், தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து அவுட்டானார்.

    நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிராஜ், பிரசித் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் தீபக் சாகர், ஆவேஷ் கான் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

    ஹராரே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர். இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள். அதேசமயம் கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் ஜிம்பாப்வே வீரர்கள் விளையாடுவார்கள். 

    ×