search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீஸ் தொடர்"

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்தது.
    • குடகேஷ் மோடி 2 இன்னிங்சிலும் சேர்த்து 13 விக்கெட் வீழ்த்தினார்.

    புலவாயோ:

    வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மழை காரணமாக முதல் டெஸ்ட் போட்டி ரத்தானது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இன்னசென்ட் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடி 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 292 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரோஸ்டன் சேஸ் 70 ரன்னும், ரேமான் ரீபர் 53 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வேயின் விக்டர் நியாச்சி 5 விக்கெட்டும், பிராண்டன் மவுடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே 173 ரன்னில் ஆல் அவுட்டானது. கேப்டன் கிரெய்க் எர்வின் 72 ரன்னும், இன்னசென்ட் 43 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடி 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 4 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குடகேஷ் மோட்டிக்கு அளிக்கப்பட்டது.

    • ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 379 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • அந்த அணியின் கேரி பேலன்ஸ் 137 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    புலவாயோ:

    வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதமடித்து அசத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் சதமடித்து 182 ரன்னில் அவுட்டானார்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 336 ரன்கள் குவித்தது. சந்தர்பால் 207 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே தரப்பில் பிராண்டன் மவுடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேரி பேலன்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    தொடக்க ஆட்டக்காரர் இன்னசெண்ட் 67 ரன்னும், பிராண்டன் மவுடா 56 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 378 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேரி பேலன்ஸ் 137 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 8-வது விக்கெட்டுக்கு கேரி பேலன்ஸ், மவுடா ஜோடி 135 ரன்கள் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், குடாகாஷ் மோடே, ஹோலட்ர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    நான்காம் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    • கேப்டன் பிராத்வேட் 182 ரன்களில் அவுட் ஆனார்.
    • ஜிம்பாப்வே தரப்பில் பிராண்டன் மவுடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இதனால் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-ம் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராத்வேட் - தேஜ்நரின் சந்தர்பால் ஆகியோர் சதம் அடித்தனர்.

    இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேப்டன் பிராத்வேட் 182 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் நங்கூரம் போல் நின்ற தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.


    தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 447 ரன்கள் எடுத்தது.

    ஜிம்பாப்வே தரப்பில் பிராண்டன் மவுடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதல் நாளில் மழை குறுக்கிட்டதால் வெஸ்ட் இண்டீஸ் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர்.

    புலவாயோ:

    வெஸ்ட்இண்டீஸ் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கேப்டன் பிராத்வெயிட், சந்தர்பால் களமிறங்கினர்.

    இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 51 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 112 ரன்களைச் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. பிராத்வெயிட், சந்தர்பால் ஆகியோர் தலா 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவடைந்தது.

    • இரு அணிகளும் 10 டெஸ்டில் விளையாடி உள்ளன.
    • இதில் வெஸ்ட்இண்டீஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி டிரா ஆனது.

    புலவாயோ:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் புலவாயோவில் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது.

    பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. ஜிம்பாப்வே அணி கடைசியாக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவி இருந்நது.

    இரு அணிகளும் 10 டெஸ்டில் விளையாடி உள்ளன. இதில் வெஸ்ட்இண்டீஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி டிரா ஆனது. ஜிம்பாப்வே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறது.

    ×