search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை தகுதிச்சுற்று"

    • இலங்கை, நெதர்லாந்து அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
    • 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக தகுதி பெறவில்லை.

    ஹராரே:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. 8 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

    இலங்கை, நெதர்லாந்து அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக தகுதி பெறவில்லை. இதேபோல் ஜிம்பாப்வே அணியும் தகுதி பெறவில்லை.

    இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி ஹராரேயில் நாளை நடக்கிறது.

    • இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது.
    • அந்த அணியின் பாஸ் டி லீடே சதமடித்தும், விக்கெட் வீழ்த்தியும் வெற்றி பெற வழிவகுத்தார்.

    புலவாயோ:

    உலக கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்புடன் ஆடி சதமடித்து, 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பெரிங்டன் 64 ரன்கள் எடுத்தார்.

    நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீடே அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் பாஸ் டி லீடே அதிரடியாக ஆடி சதமடித்தார். விரைவில் இலக்கை எட்டினால் உலக கோப்பைக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், பொறுப்புடன் ஆடினார்.

    6-வது விக்கெட்டுக்கு இணைந்த பாஸ் டி லீடே-சாகிப் ஜுல்பிகர் ஜோடி 113 ரன்கள் சேர்த்தது. 43-வது ஓவரில் ரன் அவுட்டான அவர் 92 பந்தில் 5 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 123 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் நெதர்லாந்து அணி 42.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கும் நெதர்லாந்து அணி தகுதி பெற்றது.

    ஏற்கனவே இலங்கை அணியும் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய நெதர்லாந்து 362 ரன்கள் குவித்தது.
    • இறுதியில், நெதர்லாந்து 74 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹராரே:

    ஹராரேவில் நேற்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை பெய்ததால் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து அணி

    நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் 110 ரன்கள் எடுத்தார். பரேசி 97 ரன்கள் எடுத்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

    இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. ஓமன் அணியின் அயான் கான் மட்டும் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் ஓமன் அணி 48 ஓவரில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நெதர்லாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்ரம்ஜித் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.
    • ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது.

    புலவாயோ:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தகுதி சுற்றில் தற்போது 'சூப்பர் சிக்ஸ்' போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்திடம் தோற்றதால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல்முறையாக இழந்தது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    உலக கோப்பை போட்டிக்கு 2-வதாக தகுதி பெறும் அணி எது? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போட்டியில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இருக்கின்றன.

    சூப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை 8 புள்ளியுடனும், ஜிம்பாப்வே 6 புள்ளியுடனும், ஸ்காட்லாந்து 4 புள்ளியுடனும், நெதர்லாந்து 2 புள்ளியுடனும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், ஓமன் அணிகள் இன்னும் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து இடையே நாளை நடைபெறும் போட்டி முக்கியமானது. இதில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

    • இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.
    • இலங்கை அணியின் நிசங்கா சதமடித்து வெற்றி பெற வழிவகுத்தார்.

    புலவாயோ:

    உலக கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 32.2 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சீன் வில்லியம்ஸ் 56 ரன்னும், சிக்கந்தர் ராசா 31 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் தீக்சனா 4 விக்கெட்டும், மதுஷன்கா 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே 30 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து குசால் மெண்டிஸ், நிசங்காவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டது.

    இறுதியில், இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த நிசங்கா சதமடித்து 101 ரன்னும், குசால் மெண்டிஸ் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.

    • டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இலங்கை 213 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஹராரே:

    உலக கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 47.4 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஒரு கட்டத்தில் இலங்கை அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தனஞ்செயா - ஹசரங்கா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தனஞ்செயா 93 ரன்னில் அவுட்டானார்.

    நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது. வெஸ்லி 52 ரன்னும், பாஸ் டீ லீட் 41 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். ஸ்காட் எட்வர்ட்ஸ் களம் இறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எட்வர்ட்ஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி 40 ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அமெரிக்கா 196 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஹராரே:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.

    ஒவ்வொரு குரூப்பிலும் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த அயர்லாந்து, அமெரிக்கா, நேபாளம், யுஏஇ அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறவில்லை. அந்த அணிகள் 7 முதல் 10 இடங்களுக்கான போட்டியில் இறங்கின.

    இதில் 7-வது இடத்துக்கான போட்டிக்கு முன்னேறும் அணியை தேர்வு செய்வதற்கான முதல் அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்து, அமெரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 42.4 ஓவரில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சைதேஜா முக்கமல்லா 55 ரன்னிலும், மொடோனி 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெய்லர் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 34.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று 7-வது இடத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. பால் ஸ்டிர்லிங் அரை சதம் அடித்து 58 ரன்கள் எடுத்தார். பால்பிரின் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரெய்க் யங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    • நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இலங்கை அணியின் தனஞ்செயா 93 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இன்று இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா - கருரத்ணே ஜோடி களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்திலேயே நிசங்கா கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசல் மெண்டீஸ் 10, சமரவிக்ரமா 1, அசலங்கா 2, தசுன் சனகா 5 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    ஒரு கட்டத்தில் இலங்கை அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தனஞ்செயா - ஹசரங்கா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசரங்கா 20 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த தீக்ஷனா அவருடன் நல்ல பார்னர்ஷிப்பை அமைத்தார். ஒன் மேன் ஆர்மியாக விளையாடிய தனஞ்செயா 93 ரன்னிலும் தீக்ஷனா 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் இலங்கை அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக், பாஸ் டி லீடே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • மொடோனி - சைதேஜா முக்கமல்லா ஆகிய இருவரும் அரை சதம் அடித்தனர்.

    சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இன்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் அமெரிக்க அணி பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக டெய்லர் - மொடோனி களமிறங்கினர். 23 ரன்னில் டெய்லர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் படேல் முதல் பந்திலேயே வந்த வேகத்தில் வெளியேறினார். இதனையடுத்து மொடோனி - சைதேஜா முக்கமல்ல ஜோடி சிறப்பாக ஆடினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    சிறப்பாக ஆடிய இந்த ஜோடி ரன் அவுட்டால் பிரிந்தது. சைதேஜா முக்கமல்லா 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கஜானந்த் 10 ரன்னிலும் அபிஷேக் 0 ரன்னிலும் மொடோனி 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 42.4 ஓவரில் அமெரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • உலக கோப்பை கிரிக்கெட் தகுதிப்போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.
    • இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின.

    புலவாயோ:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் (4 புள்ளி) அணிகளும் முறையே முதல் 3 இடங்களை பிடித்து 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய எதிர் பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் 13-வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், சூப்பர் சிக்ஸ் சுற்று நேற்று நடந்தது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 142 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய லாங்வே 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து ஆடிய ஓமன் அணி போராடி தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரஜாபதி சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஓமன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை வீழ்த்தியது.
    • 2வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.

    ஹராரே:

    உலக கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

    முதல் ஆட்டத்தில் இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்ச தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதம் அடித்த நிசங்கா 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொறுபுடன் ஆடிய அசலங்கா அரை சதம் விளாசி 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஸ்காட்லாந்து சார்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டும், மார்க் வாட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 246 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் ஸ்காட்லாந்து அணி 29 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் அரைசதம் அடித்தார்.

    இலங்கை அணி சார்பில் மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டும், ஹசரன்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    2வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற யுஏஇ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அதிரடியில் மிரட்டியது. பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடிக்க அயர்லாந்து அணி 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் அயர்லாந்து 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து தான் ஆடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    ஏற்கனவே ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது.

    உலக கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 6 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    இந்த தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து - யுஏஇ அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்பிரைன், ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மெக்பிரைன் 24 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய பால்பிரின், ஹேரி டெக்டர் ஆகியோர் அரைசதமும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி ஆடி வருகிறது.

    ×