என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சிக்கந்தர் ராசா அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 268 ரன்கள் குவிப்பு
    X

    சிக்கந்தர் ராசா அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 268 ரன்கள் குவிப்பு

    • ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக எர்வின் -ஜாய்லார்ட் கும்பி களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.

    முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த ஜிம்பாப்வே அணி 112 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஜாய்லார்ட் கும்பி 26, எர்வின் 47, வெஸ்லி மாதேவேரே 2, சீன் வில்லியம்ஸ் 23 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ராசா - ரியான் பர்ல் ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரை சதம் அடித்தனர். 50 ரன் எடுத்த நிலையில் ரியான் பர்ல் அவுட் ஆனார். அடுத்து வந்த கிளைவ் மடாண்டே 5, ராசா 68 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும் அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Next Story
    ×