என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக கோப்பை தகுதிச்சுற்று: நேபால் அணியை 167 ரன்னில் சுருட்டியது நெதர்லாந்து
    X

    உலக கோப்பை தகுதிச்சுற்று: நேபால் அணியை 167 ரன்னில் சுருட்டியது நெதர்லாந்து

    • நேபால் அணி கேப்டன் ரோகித் அதிகபட்சமாக 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று நேபால் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் நேபால் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் ஆகியோர் களமிறங்கினர். ஆசிப் ஷேக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பீம் ஷர்கி - குஷால் புர்டெல் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    நேபால் அணி 66 ரன் எடுத்த போது 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. குஷால் புர்டெல் 27 ரன்னிலும் அடுத்து வந்த ஆரிப் ஷேக் 6 ரன்னிலும் பீம் ஷர்கி 22 ரன்னிலும் அவுட் ஆகினர். சிறிது நேரம் தாக்குபிடித்த கேப்டன் ரோகித் 33 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்ததால் நேபால் அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×