என் மலர்
கிரிக்கெட் (Cricket)

174 ரன்கள் விளாசிய வில்லியம்ஸ்- அமெரிக்க அணிக்கு எதிராக ஜிம்பாப்வே 408 ரன்கள் குவிப்பு
- ஜிம்பாப்வே அணியின் கேப்டன் வில்லியம்ஸ் 174 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ரியான் பர்ல் 16 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே - அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாய்லார்ட் கும்பி- அப்பாவி காயா களமிறங்கினர். இன்னசெண்ட் காயா 32 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜாய்லார்ட் கும்பியுடன் கேப்டன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தினர்.
ஜாய்லார்ட் கும்பி 78 ரன்கள் இருந்த போது ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வில்லியம்ஸ் 65 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 2 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசிய ராசா 48 ரன்னில் அவுட் ஆனார். 200 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட வில்லியம்ஸ் 174 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் பர்ல் ருத்ரதாண்டவம் ஆடினார். இவர் 16 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 408 ரன்கள் குவித்தது. அமெரிக்க அணி தரப்பில் அபிஷேக் பரத்கர் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.






