search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Qualifier"

    • உலக கோப்பை கிரிக்கெட் தகுதிப்போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.
    • இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின.

    புலவாயோ:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் (4 புள்ளி) அணிகளும் முறையே முதல் 3 இடங்களை பிடித்து 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய எதிர் பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் 13-வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், சூப்பர் சிக்ஸ் சுற்று நேற்று நடந்தது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 142 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய லாங்வே 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து ஆடிய ஓமன் அணி போராடி தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரஜாபதி சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஓமன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது.
    • தேஜா நிடமானுரு-எட்வர்ட்ஸ் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்ச துவம்சம் செய்து ரன்கள் குவித்தது.

    உலகக்கோப்பை தகுதி சுற்றில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 65 பந்தில் 104 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 29.1 ஓவரில் 170 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு தேஜா நிடமானுருவுடன் எட்வர்ட்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்ச துவம்சம் செய்து ரன்கள் குவித்தது. எட்வர்ட்ஸ் 47 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தேஜா நிடமானுரு 76 பந்தில் 111 ரன்கள் விளாசினார். இதனால் நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி சென்றது.

    கடைசி ஓவரில் அந்த அணிக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்தில் எட்டு ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமநிலை ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.

    இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதல் வாய்ப்பில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச, நெதர்லாந்தின் லோகன் வான் பீக் எதிர்கொண்டார். ருத்ர தாண்டவம் ஆடிய அவர், முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் சிக்சர் மூணாவது பந்தில் பவுண்டரி, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் சிக்சர், ஆறாவது பந்தில் பவுண்டரி என முப்பது ரன்கள் விளாசினார்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் 31 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. வான் பீக் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக வான் பீக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ×