search icon
என் மலர்tooltip icon

    துருக்கி

    • எர்டோகன் தலைமையில் துருக்கி, ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளது
    • 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும் என்றார் எர்டோகன்

    தென்கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே அமைந்துள்ள அரபு நாடு துருக்கி (Turkey). இதன் தலைநகரம் அங்காரா.

    துருக்கியின் அதிபராக ரிசெப் டாய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) 2014லிருந்து பதவியில் உள்ளார். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிப்பவர் எர்டோகன்.

    நேற்று இந்த போர் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறோம். இந்த போர் முடிந்ததும் காசாவில் அமைதியையும், அது ஒரு சுதந்திர பாலஸ்தீனதின் ஒரு பகுதியாகவும் இருப்பதை பார்க்க விரும்புகிறோம். கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டு 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும். பாலஸ்தீனர்களின் வாழ்வை இருள செய்யும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது குறித்த பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஈடுபட்டாலும், நேதன்யாகுவை ஆதரிக்க போவதில்லை. இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இஸ்ரேலை பொறுப்பாக்குவோம். இஸ்ரேலை ஆதரித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நம்பிக்கையை இழந்து விட்டது.

    இவ்வாறு எர்டோகன் கூறினார்.

    அக்டோபர் 7-ஆம் தேதியிலிருந்து காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 3,826 குழந்தைகள் உட்பட 9,277 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.

    • லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் எர்டோகன் உரையாற்றினார்
    • இரு நாட்டு உறவு மறுபரிசீலனை செய்யப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்ற ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து காசா பகுதி முழுவதும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரக்கும் பல உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், துருக்கி நாட்டு அதிபர் டாயிப் எர்டோகன் (Tayyip Erdogan), அந்நாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுமார் 15 லட்சம் பேர் நடத்திய ஒரு பேரணியில் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காசாவில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும், படுகொலைகளுக்கும் மேற்கத்திய நாடுகளே காரணம். இஸ்ரேலும், கிறித்துவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்றியுள்ளது. மேற்கத்திய நாடுகளை ஒன்று கேட்க விரும்புகிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடந்தது போல் மீண்டும் இரு மதத்தினருக்கிடையே (பிறை-சிலுவை போர்) சச்சரவு நிகழ வேண்டுமா? மத்திய தரை கடல் பகுதியில், இஸ்ரேல் நாட்டை மேற்கத்திய நாடுகள் தங்கள் அதிகார ஆட்டத்திற்கு ஒரு பகடைக்காயாக மாற்றி விட்டன. இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடாக மாறி விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனையடுத்து, துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், இஸ்ரேல்-துருக்கிக்கான இரு நாட்டு உறவு மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

    சுமார் பத்தாண்டு காலம் சீரற்று இருந்த இஸ்ரேல்-துருக்கி பொருளாதார மற்றும் அரசியல் உறவு, சமீபத்தில்தான் சுமூக நிலைமையை அடைந்தது. இந்நிலையில், இந்த சம்பவம், இரு நாட்டு உறவுக்கு ஒரு பின்னடைவாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • அமெரிக்காவில் எலான் மஸ்க்- துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு
    • ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை துருக்கி வரவேற்கும்

    துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, துருக்கி அதிபர் அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    "ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வரவேற்பதாக எலான் மஸ்க் இடம் எர்டோகன் தெரிவித்தார்" என எர்டோகன் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்போது ஸ்டார்லிங் வழங்க பாதுகாப்பு தொடர்பாக உரிமத்தை பெற ஸ்பேஸ்எக்ஸ் விரும்புவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது எலான் மஸ்க் தனது மகனை கையில் வைத்திருந்தது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

    டெஸ்லாவின் முதலீட்டிற்கான மிகவும் முக்கியமான நாடுகளில் துருக்கியும் ஒன்று என மஸ்க் தெரிவித்ததாக, துருக்கி தொழில்துறை மற்றும் டெக்னாலாஜி மந்திரி மெஹ்மெட் ஃபதிக் கசிர் தெரிவித்துள்ளா். இருவரும் துருக்கியின் ஆயுதமேந்திய வான்வழி டிரோன் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறினார்.

    • கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார்.
    • முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது அதிபரின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர்.

    அங்காரா:

    துருக்கியில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு மந்திரி பதவி வகிக்காத 90 சதவீதம் பேருக்கு இந்த முறை புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது அதிபரின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். எனினும் அமைச்சரவையில் பதவி வழங்காததால் அவர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

    இந்தநிலையில் அங்கு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது துருக்கி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது திடீரென டிக்கிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்காரா:

    அமெரிக்காவை சேர்ந்தவர் மார்க் டிக்கி (வயது 40). உலகில் உள்ள குகைகளுக்கு சென்று ஆராய்வதில் ஆர்வம் கொண்ட அவர், குகை மீட்புப்பணி நிபுணராகவும் உள்ளார். இந்தநிலையில் தென்துருக்கியின் டாரஸ் மலைத்தொடர் பகுதியில் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட மோர்கா குகையை ஆய்வு செய்ய இறங்கினார். அவருடன் இயற்கை நல ஆர்வலர்கள் சிலரும் குகையை சுற்றிப்பார்க்க இறங்கினர்.

    இந்தநிலையில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது திடீரென டிக்கிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் குகையில் இருந்து வெளியேற முடியாமல் அவர் சிரமப்பட்டார். இதுகுறித்து அவருடன் சென்ற குழுவினர் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இத்தாலி, ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீட்புப்பணி நிபுணர்கள், டிக்கியை மீட்க துருக்கி விரைந்தனர். இந்த மீட்புப்பணியின்போது இரவு, பகல் பாராமல் பல்வேறு நாட்டை சேர்ந்த டாக்டர்களும் அந்த குகைக்குள் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

    இந்தநிலையில் 10 நாட்களுக்கு பிறகு மார்க் டிக்கி குகையில் இருந்து உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • துருக்கியின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் பீதியில் உறைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ளன.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியது நினைவிருக்கலாம்.

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது
    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்து பேசப்படும் என எதிர்பார்ப்பு

    ரஷிய அதிபர் புதின் சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த மாதம் துருக்கி வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ''தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், வெளிநாட்டுத்துறை மந்திரி, புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவர்கள் புதின் வருகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது, இந்த மாதத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன்'' என்றார்.

    கடந்த புதன்கிழமை இரு தலைவர்கள் போன் மூலம் பேசிக்கொண்டனர். அப்போது புதின், துருக்கி வருகையை எர்டோகன் ஏற்றுக்கொண்டார்.

    புதின் வருகையின்போது கருங்கடல் தானிய ஒப்பந்தம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரஷியா இன்னும் நீட்டிக்காமல் உள்ளது. இதை நீட்டித்தால் துருக்கி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியும்.

    ஜூலை 2022-ம் ஆண்டு துருக்கி, ஐக்கிய நாடுகள், உக்ரைனுடன் தானிய பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தில் ரஷியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 17-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின் ரஷியா ஒப்பந்தத்தை நீட்டிகக்வில்லை.

    • சந்தோஷத்தை கொண்டாட சிறிது மது அருந்தியுள்ளனர்
    • அனைத்தும் உடனடியாக நடந்து முடிந்து விட்டது என வேதனை தெரிவித்த காதலன்

    துருக்கி நாட்டில் கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்த ஒரு துயர சம்பவத்தில் ஒரு பெண், தன் காதலனுடன் நிச்சயம் செய்து கொண்ட சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தார். 39 வயதான எசிம் டெமிர் எனும் பெண்ணும் நிசாமெட்டின் குர்சு என்பவரும் மணமுடிக்க விரும்பினர். இயற்கையழகுடன் கூடிய ஒரு சிறு மலைவிளிம்பில் நின்று கொண்டு சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருவரும் விரும்பினர்.

    இதற்காக இருவரும் வடமேற்கு துருக்கியில் உள்ள கனக்காலே (Canakkale) மலை முகட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சம்பிரதாய விருப்பங்களை தெரிவித்து கொண்டனர். பிறகு இந்நிகழ்வை கொண்டாட நிசாமெட்டின் காரிலிருந்து உணவு வகைகள் மற்றும் பானங்களை கொண்டு வர சென்றார்.

    அப்போது திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டு அவர் விரைவாக திரும்பி வந்திருக்கிறார். அங்கு அவருடைய வருங்கால மனைவி மலை உச்சியில் இருந்து தவறி விழுந்திருப்பதை கண்டார். அப்போது எசிம் உயிரோடு இருந்திருக்கிறார். நிசாமெட்டின் உடனடியாக உதவி கோரியிருக்கிறார். விரைந்து வந்த மருத்துவ குழு அவர் உயிரை காக்க போராடியது. ஆனால் பலத்த காயம் அடைந்த எசிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    "நாங்கள் சந்தோஷத்தை கொண்டாட சிறிது மது அருந்தினோம். அனைத்தும் உடனடியாக நடந்து முடிந்து விட்டது. அவள் நிலை தடுமாறி 100 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருந்து விழுந்து இறந்தார்" என காதலியை பறி கொடுத்த சோகத்தில் நிசாமெட்டின் தெரிவித்தார்.

    பலர் இந்த இடத்திற்கு இயற்கையழகை ரசிப்பதற்காக வந்து கொண்டிருந்தாலும், அங்குள்ள சாலைகள் மிகவும் மோசம் என்றும் மலை முகட்டின் ஓரங்களில் ஒரு பாதுகாப்பு தடுப்பு கூட இல்லை என்றும் எசிம் டெமிரின் நண்பர்கள் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்டிருந்த இந்த பகுதி, சுற்றுலா பார்வையாளர்களுக்கு ஜூலை 15 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார்
    • உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வர துருக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டது

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. ராணுவ உதவி கேட்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்றுள்ளார். துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். அப்போது உக்ரைன் நேட்டோ படையில் இணைய சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனவும் தெரிவித்தார்.

    முன்னதாக, சுவீடன் நேட்டோ படையில் இணைய விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடன் நிரந்தர உறுப்பினர் ஆக முடியவில்லை. துருக்கி பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் குர்திஷ் மற்றும் இதர குரூப் விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்காததால் சுவீடனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் பின்லாந்து நேட்டோவில் இணைய ஆதரவு அளித்துள்ளது.

    துருக்கி- ஐரோப்பிய நாடுகள் இடையே உணவு தானியம் குறித்த ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தம் கருங்கடல் வழியாக உணவு தானியங்களை கொண்டு செல்வது என்பதாகும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூலை 17-ந்தேதி முடிவடைகிறது. இதை நீட்டிக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என எர்டோகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உக்ரைன் தானியங்கள் கருங்கடல் வழியாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். சுமார் 30 மில்லியன் டன் உணவு தானியங்கள் வெளிநாடுகளுக்கு உக்ரைனில் இருந்து செல்வதால் உணவு தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.

    ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ளதால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா தயக்கம் காட்டுகிறது.

    உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க உதவியாக இருக்கிறது.

    சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

    • இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கவில்லை.
    • 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி அபாரமான கோல் அடித்தார்.

    இஸ்தான்புல்:

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இரு அணிகளுமே எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து கோல் அடிக்க முயன்றன. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை. 

    இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னேறியது. 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.

    • துருக்கி அதிபராக ஏர்டோகன் 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
    • கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    அங்காரா:

    துருக்கியில் அதிபர் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு கடந்த 28-ம் தேதி நடந்தது. இதில் தற்போதைய அதிபர்  எர்டோகன், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கிலிக்டரோக்லு இடையே கடும் போட்டி நிலவியது.

    இதில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வாக்குகள் பெற்றார்.

    இந்நிலையில், தலைநகர் அங்காராவில் நடைபெற்ற விழாவில் எர்டோகன் துருக்கி அதிபராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது

    துருக்கியின் பிரதமராகவும் அதிபராகவும் கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துருக்கியில் அதிபர் தேர்தலின் 2வது சுற்று வாக்குப் பதிவு நேற்று நடந்தது.
    • 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
    துருக்கியில் கடந்த 15ம் தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லு இடையே கடும் போட்டி நிலவியது.

    துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும்,கெமல் கிலிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

    யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28ம் தேதி (நேற்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி நேற்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2வது சுற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

    இந்நிலையில் துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

    அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வாக்குகள் பெற்றார்.

    இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

    அவர் ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை முறியடித்துள்ளார்.

    ×