search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Turkey Cave"

    • 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது திடீரென டிக்கிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்காரா:

    அமெரிக்காவை சேர்ந்தவர் மார்க் டிக்கி (வயது 40). உலகில் உள்ள குகைகளுக்கு சென்று ஆராய்வதில் ஆர்வம் கொண்ட அவர், குகை மீட்புப்பணி நிபுணராகவும் உள்ளார். இந்தநிலையில் தென்துருக்கியின் டாரஸ் மலைத்தொடர் பகுதியில் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட மோர்கா குகையை ஆய்வு செய்ய இறங்கினார். அவருடன் இயற்கை நல ஆர்வலர்கள் சிலரும் குகையை சுற்றிப்பார்க்க இறங்கினர்.

    இந்தநிலையில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது திடீரென டிக்கிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் குகையில் இருந்து வெளியேற முடியாமல் அவர் சிரமப்பட்டார். இதுகுறித்து அவருடன் சென்ற குழுவினர் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இத்தாலி, ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீட்புப்பணி நிபுணர்கள், டிக்கியை மீட்க துருக்கி விரைந்தனர். இந்த மீட்புப்பணியின்போது இரவு, பகல் பாராமல் பல்வேறு நாட்டை சேர்ந்த டாக்டர்களும் அந்த குகைக்குள் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

    இந்தநிலையில் 10 நாட்களுக்கு பிறகு மார்க் டிக்கி குகையில் இருந்து உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×