search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலக்ஸி ஏ9"

    நான்கு பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyA9



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது.

    இதில் 24 எம்.பி சென்சார்,  f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது.

    6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
    - 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
    - 5 எம்.பி டெப்த் கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் கேவியர் பிளாக், லெமனேட் புளு மற்றும் பபுள்கம் பின்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐரோப்பாவில் இதன் விலை 599 யூரோக்களில் (இந்திய மதிப்பில் ரூ.51,300) துவங்குகிறது. ரஷ்யாவில் இதன் விலை 39,990 ரூபல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.44,444) என்றும், லண்டனில் 549 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,720) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    சாம்சங் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. #GalaxyS9Plus #GalaxyNote9



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனினை புதிய பர்கன்டி ரெட் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு, மிட்நைட் பிளாக், கோரல் புளு மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. 

    கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக லேவென்டர் பர்பிள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது.



    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் லேவென்டர் பர்பிள் மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பர்கன்டி ரெட் நிற வேரியன்ட்கள் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்கள், ஆன்லைன் போர்டல் மற்றும் சாம்சங் ஷாப் மையங்களில் கிடைக்கிறது. 

    இத்துடன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.24,990 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலைக்கு வழங்குகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் நோட் 9 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.6,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #GalaxyS9



    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது புதிய விளம்பர யுக்தியை அறிவித்துள்ளது. அதன்படி நெதர்லாந்தில் உள்ள சிறிய கிராமத்திற்கு சென்ற சாம்சங் அங்கு வசிப்பவர்களுக்கு 50 புத்தம் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த உலகம் முழுக்க சிறிய போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்கப்படுகின்றன. பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இதை பின்பற்றி வரும் நிலையில், சாம்சங் இதே வழிமுறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

    நெதர்லாந்தில் சாம்சங் சென்று இருக்கும் கிராமத்தின் பெயர் அப்பெல் அதாவது தட்சு மொழியில் ஆப்பிள் என பொருள் கொண்டுள்ளது. இந்த ஒரே காரணத்திற்காகவே சாம்சங் அங்கு 50 கேலக்ஸி எஸ்9 யூனிட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. 



    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, கிராமத்தில் வசிக்கும் 312 பேரில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு புதிய கேலக்ஸி எஸ்9 யூனிட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் வழங்கும் தருணங்களை சிறிய வீடியோவாக சாம்சங் நெதர்லாந்து அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வீடியோ ஆப்பிள் சமூகம் சாம்சங்கிற்கு மாறுகிறது என்ற தலைப்பில் துவங்குகிறது. 

    சாம்சங் பதிவிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்..,

    <div align="center">
    <object height="360">
    <embed src="https://www.youtube.com/v/WLEZAbfBDl4?rel=0" height="360px" width="100%" />
    </object>
    </div>
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் நிலையில், இதன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Nokia9



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என அறிவித்து இருந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில் ஸ்மார்ட்போனின் நிஜ புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முன்புறம் தெளிவாக காட்சியளிக்கிறது. லீக் ஆன புகைப்படம் வெய்போவில் பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி நோக்கியா 9 மாடலில் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படாது என தெரியவந்துள்ளது.

    எனினும் ஸ்மார்ட்போனின் மேல்புறம் மற்றும் கீழ்புறங்களில் தடிமனான பெசல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் போனின் பக்கவாட்டுகளில் வளைந்த வடிவமைப்பு கொண்டிருப்பதால் பிரீமியம் தோற்றம் கொண்டுள்ளது. இதேபோன்ற வடிவமைப்பு சமீபத்திய சாம்சங் ஃபிளாக்ஷிப் மாடல்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஒட்டுமொத்த வடிவமைப்பின் படி புதிய ஸ்மார்ட்போன் பார்க்க நோக்கியா 8 சிரோக்கோ போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் அறியப்படவில்லை. 


    புகைப்படம் நன்றி: QuansongKJ

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் ஐந்து கேமரா லென்ஸ் 1-1-3 என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு ஒன்றில் எல்.இ.டி. ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. பின்புறம் வட்ட வடிவில் சீராக ஐந்து கேமரா லென்ஸ் மட்டும் காணப்படும் நிலையில், கைரேகை சென்சார் இடம்பெறவில்லை.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் போன்று 3டி ஃபேஸ் அன்லாக் அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பியூர் வியூ பிரான்டை கைப்பற்றியது. இதே பிரான்டினை நோக்கியா விற்பனையை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியதும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SamsungGalaxyNote9



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    சாம்சங் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் மற்றும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறங்களில் எஸ் பென் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் கிளவுட் சில்வர் வெர்ஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    கேலக்ஸி நோட் 9 கிளவுட் சில்வர் நிற வேரியன்ட் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மிட்நைட் பிளாக் நிற வெர்ஷனும் அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. புதிய கிளவுட் சில்வர் கேலக்ஸி நோட் 9 மாடலின் விற்பனை அக்டோபர் 5-ம் தேதி முதல் துவங்குகிறது.

    மிட்நைட் பிளாக் நிறம் கொண்ட கேலக்ஸி நோட் 9 விலை 999.99 டாலர்கள் மற்றும் 1249.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
    - ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
    - சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    - 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - BLE எஸ் பென்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சமீபத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய சந்தையில் ரூ.67,900 விலையில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 9 முன்பதிவு துவங்கிய சில வாரங்களில், கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் ரூ.4,999 விலையில் வழங்குவதாக அறிவித்தது. சாம்சங் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் உண்மை விலை ரூ.22,990 ஆகும்.

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் (42 எம்.எம்.) மாடலுக்கு குறுகிய கால சலுகையாக ரூ.9,999 விலையில் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் உண்மை விலை ரூ.24,990 ஆகும். சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை செப்டம்பர் 26-ம் தேதி துவங்கி அக்டோபர் 20-ம் தேதி வரை செல்லுபடியாகும்.
    சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேலக்ஸி வாட்ச் சாதனம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. #GalaxyNote9



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்திய சந்தையில் ரூ.67,900 விலையில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 9 முன்பதிவு துவங்கிய சில வாரங்களில், கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் ரூ.4,999 விலையில் வழங்குவதாக அறிவித்தது. சாம்சங் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் உண்மை விலை ரூ.22,990 ஆகும்.

    இந்நிலையில், சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் (42 எம்.எம்.) மாடலுக்கு குறுகிய கால சலுகையாக ரூ.9,999 விலையில் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் உண்மை விலை ரூ.24,990 ஆகும். சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை செப்டம்பர் 26-ம் தேதி துவங்கி அக்டோபர் 20-ம் தேதி வரை செல்லுபடியாகும்.



    சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை சாம்சங் ஆஃப்லைன் விற்பனை மையத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்ட நிலையில், ஆன்லைனில் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே சாம்சங் ரூ.6,000 கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு வழங்குகிறது. 

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியின் கீழ் மாதம் ரூ.7543.80 என்றும், பேடிஎம் மால் தளத்தில் வாங்குவோருக்கு ரூ.6000 கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.6,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஐந்து கேமரா செட்டப் கொண்ட நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #nokia9 #smartphone



    ஐந்து கேமரா சென்சார் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஃபாக்ஸ்கான் இந்த ஸ்மார்ட்போனினை வடிவமைத்து உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் சீனாவில் லீக் ஆகி இருக்கிறது.

    புதிய ப்ரோடோடைப் புகைப்படத்தில் TA-1094 என்ற மாடல் நம்பர் இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 9 என்ற பெயரில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    பின்புறம் ஐந்து கேமரா லென்ஸ் 1-1-3 என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு ஒன்றில் எல்.இ.டி. ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. பின்புறம் வட்ட வடிவில் சீராக ஐந்து கேமரா லென்ஸ் மட்டும் காணப்படும் நிலையில், கைரேகை சென்சார் இடம்பெறவில்லை.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் போன்று 3டி ஃபேஸ் அன்லாக் அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பியூர் வியூ பிரான்டை கைப்பற்றியது. இதே பிரான்டினை நோக்கியா விற்பனையை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியதும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9


    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் நோட் 9 ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டது.
      
    சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன், நோட் 8 போன்றே காட்சியளிக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்9 சீரிஸ் போன்றே 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5, f/2.4 அப்ரேச்சர், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் இம்முறை கேமராவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பிக்ஸ்பி அசிஸ்டண்ட் சேவை மற்றும் இதனை இயக்க பிரத்யேக ஹார்டுவேர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



    மேம்படுத்தப்பட்ட எஸ் பென் ஸ்டைலஸ் ப்ளூடூத் வசதி மற்றும் பட்டன் கொண்டுள்ளது. இதை கொண்டு செல்ஃபி மற்றும் வழக்கமான புகைப்படம் போன்றவற்றை எடுக்க முடியும். கேமராவை ஆன் செய்து ஸ்டைலஸ்-இல் உள்ள பட்டனை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது. மேலும் இந்த பட்டன் கொண்டு வீடியோவை பிளே, பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.

    நோட் 9 ஸ்மார்ட்போனில் AKG டியூன் செய்த ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுன்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள ஏ.ஆர். எமோஜி மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் முகத்தில் உள்ள 100-க்கும் அதிக முக நுனுக்கங்களை கண்டறிந்து 3D மாடல் ஒன்றை உருவாக்கி உங்களது முகபாவனைகளை உருவாக்குகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோட் 9 மாடலில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

    – 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ்
    – ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர்
    - மாலி G72MP18 GPU
    – 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    – 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
    – மெமரியை நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
    – சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    – 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    – 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
    – வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    – ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    – BLE எஸ் பென்
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
    – 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர் மற்றும் வயர்லெஸ்

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறத்தில் எஸ் பென், ஓசன் புளு ம்ற்றும் எல்லோ எஸ் பென் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.67,900 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது.

    ப்ளிப்கார்ட், பேடிஎம் மால், சாம்சங் ஆன்லைன் ஸ்டோல் மற்றும் ஆஃப்லைன் தளங்களிலும் இந்த நோட் 9 விற்பனை நடைபெற இருக்கிறது. மேலும் ஏர்டெல் தளத்தில் ரூ.7,900 செலுத்தியும் கேலக்ஸி நோட் 9 மாடலை பெற முடியும்.
    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எஃப்9 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OPPOF9


    ஒப்போ நிறுவனத்தின் எஃப்9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக எஃப்9 ஸ்மார்ட்போன் வியட்நாமில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எஃப் 9 மாடலில் 25 எம்பி செல்ஃபி கேமரா, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

    வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் கேமரா செயலியில் கூகுள் லென்ஸ் வசதியை வழங்குவதாக கூறிவருகிறது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் ஏ.ஐ. பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஒப்போ எஃப்9 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் FHD பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் 
    - ARM மாலி-G72 MP3 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓஎஸ்5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.85
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் விற்பனை துவங்க இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன சிறப்பு என்பதை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் அறிமுகமான கேலக்ஸி நோட் 9 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவும் துவங்கியுள்ளது. எஸ் பென் ஸ்டைலஸ் உடன் வரும் கேலக்ஸி நோட் 9 மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    பிளாக், காப்பர், பர்பபிள் மற்றும் ஓசன் புளு என நான்கு நிறங்களில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் தற்சமயம் தங்க நிறத்தில் கிடைக்கிறது. 

    கேவியர் எனும் ரஷ்ய நிறுவனம் கேலக்ஸி நோட் 9 மாடலின் ஃபைன் கோல்டு எடிஷனை உருவாக்கியுள்ளது. இதன் பின்புற பேனலில் 1 கிலோ ஃபைன் கோல்டு 999.9 பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    கேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் 128 ஜிபி வேரியன்ட் விலை RUB38.7 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.40.6 லட்சம்), 256 ஜிபி வேரியன்ட் RUB 38.9 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.40.8 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலின் சன்ரைஸ் கோல்டு எடிஷனை ரூ.68,900 விலையில் அறிமுகம் செய்தது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

    – 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ்
    – ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
    – ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
    – 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    – 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
    – மெமரியை நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
    – சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    – 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    – 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
    – வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    – ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    – BLE எஸ் பென்
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
    – 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. #GalaxyNote9
    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 22-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டதோடு ஏர்டெல் தளத்தில் மாத தவணை முறையிலும் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகமான கேலக்ஸி நோட் 9 மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் (128 ஜிபி மட்டும்) போன்ற நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 9 (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடலின் விலை ரூ.67,900 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் கார்டுகளை கொண்டு வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பயன்படுத்தலாம்.


    அறிமுக சலுகைகள்:

    - பேடிஎம் தளத்தில் கேலக்ஸி நோட் 9 வாங்கும் போது ரூ.6000 வரை கேஷ்பேக்
    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தினால் ரூ.6000 கேஷ்பேக்
    - சாம்சங் அப்கிரேடு சலுகையின் கீழ் பழைய நோட் 9 ஸ்மார்ட்போனை கொடுத்து ரூ.6000 அப்கிரேடு போனஸ் பெறலாம்
    - கேலக்ஸி நோட் 9 முன்பதிவு செய்வோர் ரூ.22,900 மதிப்புள்ள கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ.4,999-க்கு வாங்கலாம்
    - சாம்சங் ஷாப் தளத்தில் ரூ.6000 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.
    - அமேசான் தளத்திலும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ.15,850 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது
    - ப்ளிப்கார்ட் தளத்திலும் வட்டியில்லா மாத தவணை முறை மற்றும் ரூ.15,950 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

    – 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ்
    – ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
    – ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
    – 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    – 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
    – மெமரியை நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
    – சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    – 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    – 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
    – வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    – ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    – BLE எஸ் பென்
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
    – 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. #GalaxyNote9


    சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 வாங்குவோரை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

    அதன்படி கேலக்ஸி நோட் 9 வாங்க விரும்புவோர் ஏர்டெல் தளத்தில் ரூ.7,900 செலுத்தி புத்தம் புதிய நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை பெறலாம். பின் மீதித் தொகையை மாதம் ரூ.2,999 என 24 மாதங்களுக்கு செலுத்தலாம். இதன் மூலம் இரண்டு ஆண்டுக்கான மொத்த தவணை மற்றும் ஏர்டெல் திட்டதிற்கான கட்டணம் ரூ.79,876 ஆகும்.

    இத்துடன் மாத தவணை முறையுடன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன் பில்ட்-இன் திட்டத்தில் பயனர்களுக்கு மாதம் 100 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் சேவைகளுக்கு இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    தற்சமயம் பயனர்கள் தங்களுக்கான நோட் 9 ஸ்மார்ட்போனினை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்வோருக்கு ரூ.4,999 விலையில் கியர்ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாம்சங் வலைதளத்தில் வழங்கப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்டு 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. #GalaxyNote9 #Airtel
    ×