search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதிய நிறத்தில் அறிமுகமான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
    X

    புதிய நிறத்தில் அறிமுகமான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SamsungGalaxyNote9



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    சாம்சங் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் மற்றும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறங்களில் எஸ் பென் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் கிளவுட் சில்வர் வெர்ஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    கேலக்ஸி நோட் 9 கிளவுட் சில்வர் நிற வேரியன்ட் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மிட்நைட் பிளாக் நிற வெர்ஷனும் அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. புதிய கிளவுட் சில்வர் கேலக்ஸி நோட் 9 மாடலின் விற்பனை அக்டோபர் 5-ம் தேதி முதல் துவங்குகிறது.

    மிட்நைட் பிளாக் நிறம் கொண்ட கேலக்ஸி நோட் 9 விலை 999.99 டாலர்கள் மற்றும் 1249.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
    - ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
    - சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    - 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - BLE எஸ் பென்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சமீபத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய சந்தையில் ரூ.67,900 விலையில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 9 முன்பதிவு துவங்கிய சில வாரங்களில், கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் ரூ.4,999 விலையில் வழங்குவதாக அறிவித்தது. சாம்சங் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் உண்மை விலை ரூ.22,990 ஆகும்.

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் (42 எம்.எம்.) மாடலுக்கு குறுகிய கால சலுகையாக ரூ.9,999 விலையில் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் உண்மை விலை ரூ.24,990 ஆகும். சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை செப்டம்பர் 26-ம் தேதி துவங்கி அக்டோபர் 20-ம் தேதி வரை செல்லுபடியாகும்.
    Next Story
    ×