search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு தள்ளுபடி விலையில் கேலக்ஸி வாட்ச்
    X

    சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு தள்ளுபடி விலையில் கேலக்ஸி வாட்ச்

    சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேலக்ஸி வாட்ச் சாதனம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. #GalaxyNote9



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்திய சந்தையில் ரூ.67,900 விலையில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 9 முன்பதிவு துவங்கிய சில வாரங்களில், கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் ரூ.4,999 விலையில் வழங்குவதாக அறிவித்தது. சாம்சங் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் உண்மை விலை ரூ.22,990 ஆகும்.

    இந்நிலையில், சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் (42 எம்.எம்.) மாடலுக்கு குறுகிய கால சலுகையாக ரூ.9,999 விலையில் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் உண்மை விலை ரூ.24,990 ஆகும். சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை செப்டம்பர் 26-ம் தேதி துவங்கி அக்டோபர் 20-ம் தேதி வரை செல்லுபடியாகும்.



    சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை சாம்சங் ஆஃப்லைன் விற்பனை மையத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்ட நிலையில், ஆன்லைனில் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே சாம்சங் ரூ.6,000 கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு வழங்குகிறது. 

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியின் கீழ் மாதம் ரூ.7543.80 என்றும், பேடிஎம் மால் தளத்தில் வாங்குவோருக்கு ரூ.6000 கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.6,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×