search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nokia 9"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா லென்ஸ் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #nokia9 #smartphone



    ஐந்து கேமரா சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் வெளியாகியிருக்கும் தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய தகவலுடன் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் முன்புற வடிவமைப்பு தெளிவாக தெரியும் படியான புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்த நோக்கியா 9 கான்செப்ட் புகைப்படங்களை போன்றே காட்சியளிக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோக்கியா 9 வெளியீடு சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவின் போது நடைபெறலாம் என தெரிகிறது.



    இதுவரை இணையத்தில் வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ், செய்ஸ் பிராண்டிங், எல்.இ.டி. ஃபிளாஷ், பிராக்சிமிட்டி அல்லது லேசர் ஆட்டோ ஃபோகஸ் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    மேலும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் நிலையில், இதன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Nokia9



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என அறிவித்து இருந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில் ஸ்மார்ட்போனின் நிஜ புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முன்புறம் தெளிவாக காட்சியளிக்கிறது. லீக் ஆன புகைப்படம் வெய்போவில் பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி நோக்கியா 9 மாடலில் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படாது என தெரியவந்துள்ளது.

    எனினும் ஸ்மார்ட்போனின் மேல்புறம் மற்றும் கீழ்புறங்களில் தடிமனான பெசல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் போனின் பக்கவாட்டுகளில் வளைந்த வடிவமைப்பு கொண்டிருப்பதால் பிரீமியம் தோற்றம் கொண்டுள்ளது. இதேபோன்ற வடிவமைப்பு சமீபத்திய சாம்சங் ஃபிளாக்ஷிப் மாடல்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஒட்டுமொத்த வடிவமைப்பின் படி புதிய ஸ்மார்ட்போன் பார்க்க நோக்கியா 8 சிரோக்கோ போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் அறியப்படவில்லை. 


    புகைப்படம் நன்றி: QuansongKJ

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் ஐந்து கேமரா லென்ஸ் 1-1-3 என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு ஒன்றில் எல்.இ.டி. ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. பின்புறம் வட்ட வடிவில் சீராக ஐந்து கேமரா லென்ஸ் மட்டும் காணப்படும் நிலையில், கைரேகை சென்சார் இடம்பெறவில்லை.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் போன்று 3டி ஃபேஸ் அன்லாக் அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பியூர் வியூ பிரான்டை கைப்பற்றியது. இதே பிரான்டினை நோக்கியா விற்பனையை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியதும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஐந்து கேமரா செட்டப் கொண்ட நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #nokia9 #smartphone



    ஐந்து கேமரா சென்சார் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஃபாக்ஸ்கான் இந்த ஸ்மார்ட்போனினை வடிவமைத்து உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் சீனாவில் லீக் ஆகி இருக்கிறது.

    புதிய ப்ரோடோடைப் புகைப்படத்தில் TA-1094 என்ற மாடல் நம்பர் இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 9 என்ற பெயரில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    பின்புறம் ஐந்து கேமரா லென்ஸ் 1-1-3 என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு ஒன்றில் எல்.இ.டி. ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. பின்புறம் வட்ட வடிவில் சீராக ஐந்து கேமரா லென்ஸ் மட்டும் காணப்படும் நிலையில், கைரேகை சென்சார் இடம்பெறவில்லை.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் போன்று 3டி ஃபேஸ் அன்லாக் அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பியூர் வியூ பிரான்டை கைப்பற்றியது. இதே பிரான்டினை நோக்கியா விற்பனையை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியதும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×