என் மலர்

  தொழில்நுட்பம்

  ஐந்து கேமரா கொண்ட நோக்கியா போன் வெளியீட்டு விவரங்கள்
  X

  ஐந்து கேமரா கொண்ட நோக்கியா போன் வெளியீட்டு விவரங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா லென்ஸ் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #nokia9 #smartphone  ஐந்து கேமரா சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் வெளியாகியிருக்கும் தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புதிய தகவலுடன் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் முன்புற வடிவமைப்பு தெளிவாக தெரியும் படியான புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்த நோக்கியா 9 கான்செப்ட் புகைப்படங்களை போன்றே காட்சியளிக்கிறது.

  ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோக்கியா 9 வெளியீடு சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவின் போது நடைபெறலாம் என தெரிகிறது.  இதுவரை இணையத்தில் வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ், செய்ஸ் பிராண்டிங், எல்.இ.டி. ஃபிளாஷ், பிராக்சிமிட்டி அல்லது லேசர் ஆட்டோ ஃபோகஸ் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

  மேலும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
  Next Story
  ×