search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு முகாம்"

    • வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நடக்கிறது
    • 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) முத்துரங்கம் அரசு கல்லூரியில் நடத்துகிறது.

    இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ உள்ளிட்ட கல்வித்தகுதி உடைய வேலைதேடுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

    தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. விரும்பம் உள்ள நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in-என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
    • 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவா ய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களு ம் நடத்தப்பட்டு வருகின்றன. 

    ஜூலை 2023-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள். விழுப்புரம் மாவட்ட த்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை( ஐ.டி.ஐ, டிப்ளமோ, என்ஜினியரிங்/ பி.டெக், நர்சிங், பார்மஸி) போன்ற கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞ ர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம். இம்மு காமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடு நர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்க ப்படுகிறது. தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.7.2023 அன்று நடைபெறுகின்றது.
    • தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.7.2023 அன்று நடைபெறுகின்றது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்து கொள்ளும் "தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்" ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் வேலையளிப்பவர் கோரும் பட்சத்தில், உரிய விதிகளின்படி நேர்முகத்தேர்விற்கு பரிந்துரை செய்யப்படும்.

    இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனை யாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வி த்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறு வனங்கள் தெரிவித்துள்ளன.

    ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 21.7.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
    • பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை, சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை), காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    மேலும், இந்த முகாமில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரைச் சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்கள் தேர்வு செய்ய உள்ளனர். இதில், எஸ்.எஸ்.எல்.சி, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி திருவாரூரில் நடக்கிறது.
    • திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் ஆகியவை சார்பில் திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

    முகாமில் திருவாரூர் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இதில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.

    திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே விருப்பமுள்ள வேலை தேடும் இளைஞர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொலைபேசி எண்ணை 04366-224226 தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றனர்.
    • இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது .

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-  கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. எனவே, வருகிற 21 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு , ஐ.டி.ஐ , டிப்ளமோ , பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10-30 மணிக்கு நடக்கிறது.
    • எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 16-ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10-30 மணிக்கு நடக்கிறது.

    முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய வருகை தர உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ.,டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    வேலையளிப்போரும் மேலும் வேலை நாடுபவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இம்மாதம் நாளை (16-ந் தேதி) வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடப்பது வழக்கம்.
    • டிப்ளமோ, கல்லூரி படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடப்பது வழக்கம்.

    அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

    இதில், கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கல்லூரி படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ராமநாதபுரத்தில் 16-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவ னத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக் கேற்ப தனியார்துறை நிறுவ னங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார்துறை நிறுவனங்கள்மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன் பெறலாம்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • விழுப்புரம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
    • கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவா ய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஜூன் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவு ள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ. பி.டெக், நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம்.

    இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடு நர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்தி றனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இம்முகாமில் பங்கேற்று பய ன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட காலி பணி இடங்களுக்கு தகுதியான நபர்களை வரும் 16-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 2.மணி வரை தேர்வு நடைபெற உள்ளன.

    இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ.. பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுபர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் போது 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் கலந்துகொள்ள வேண்டும்.

    விருப்பமுள்ளவர்கள் www.tnprivatcjobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை எவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    ×