search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு முகாம்"

    • சீர்காழியில் வருகிற 18-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடபட்டு இருந்தது.
    • மழையில் காரணமாக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:-

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2-வது சிறப்பு தனியார்துறை வேலைவாய்;ப்பு முகாமானது வருகிற 18-ந்தேதி சனிக்கிழமையன்று சீர்காழியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் முகாம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.
    • 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 2-வது சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை 4-ந்தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
    • வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 3 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2-வது தனியார் வேலை வாய்ப்பு முகாம் காரைக்குடி யில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள வர்கள் உரிய ஆவணங்க ளுடன் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க உள்ள தனியார் துறை நிறுவனங்கள் https://b itly/svgempreg என்ற இணைப்பில் பதிவு செய்வது அவசியம்.

    மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார் வேலைவாய்ப்பு இணை யத்திலும் பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு தொடர் பான பல்வேறு தகவல் களை பெற SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel—ல் இணைந்து பயன்பெற லாம். இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    மேலும் இந்த முகாமில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி சேர்க்கை விண்ணப்பம், திறன் பயிற்சி களுக்கான விண்ணப்பம், வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிர்வாக காரணங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரையில் 9-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    மதுரை

    கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ கம் முழுவதும் 100 தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் வாயி லாக வரும் 9-ந்தேதி திருப் பாலை இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவல கத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்துடன் நேரிலோ அல்லது spljobfairmdu2023@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

    இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 8, 10, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்ப டிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்ட தாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனி யார் துறை நிறுவனங்க ளில் பணி நியமனம் பெறலாம்.இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை தேடுவோர் தங்க ளது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் நேரில் வரவும்.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற் றம் செய்து பயன் பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் தொலைபேசி எண். 0452-2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

    இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங் களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.

    • வருகிற 27-ந்தேதி நடக்கிறது
    • சான்றிதழ்களின் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும்

    திருவண்ணாமலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாம லையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    அருணை பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

    திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட் டம் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்ப டிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களு டைய 4 பாஸ்போர்ட்டு சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமு ள்ளவர்கள்

    www.tnprivatejobs.tn.gov. in என்ற இணையதள முகவரி அல்லது https://forms.gle/ NSVtGVHwEAECg9qF7 என்ற google படிவத்தில் பதிவு செய்ய லாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று கொள்ளலாம்.

    எனவே திருவண்ணா மலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவு ள்ளது.
    • தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 26-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவு ள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் பெண் வேலைநாடுநர்கள் 2021, 2022 மற்றும் 2023 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளோமோ தேர்ச்சி பெற்று, 18 முதல் 22 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தகுதியுடைய பெண் வேலைநாடுநர்கள் அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ள பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும் இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பயிற்சி காலம் முடிவு பெற்ற பின் நிரந்தர பணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை பெற முடியும். மேலும், பயிற்சி காலத்தில் 12-ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.12,300 டிப்ளோமா முடித்தவர்களு க்கு ரூ.13,400 மாத ஊதியமும், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
    • பல்வேறு கோரி க்கைகள் குறித்த மனுக்களை பெற்று ெகாண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், பொது மக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்று ெகாண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தகுதியில்லாத மனுக்க ளுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக, முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழா வினையொட்டி கிருஷ் ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 26-ந் தேதியன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் இணைந்து நடத்தும், 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்குபெறும், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு நடை பெறுவதை பொதுமக்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக விழிப் புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலு வலர் ரமேஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கிறது.

    சிவகங்கை

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்த உள்ளது. முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடைபெற உள்ளது.

    இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்து உள்ளார்.

    • வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற வுள்ளது.
    • அனைத்து இளைஞர் களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட வுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-24-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்ட மிடப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12 ந்தேதி (சனிக்கிழமை) வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வள்ளலார் ஞான சபை எதிரில், வடலூரில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற வுள்ளது. 

    இம்முகாமில் மகளிர் திட்டம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர் களுக்கு, மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர் களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட வுள்ளது. கடலூர் மாவட்ட த்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவ னகிரி, பரங்கி பேட்டை, கீரப்பாளையம், கம்மாபுரம் மற்றும் விருத்தா சலம் உள்ள ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். 

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படங்கள், சுய விலாச மிட்ட அஞ்சல் உறை களுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம். மேலும், இதர தகவல்களுக்கு மகளிர் திட்ட அலுவலகம், 3வது குறுக்கு தெரு, சீத்தாராமன் நகர், புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
    • இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

     திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணி அமர்த்தும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 2404 வேலை நாடுனர்களும், 96 வேலையளிக்கும் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான வேலை நாடுனர்களை தேர்வு செய்தனர். இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 160 வேலை நாடுனர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 161-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. 3237 பேர் கலந்து கொண்டனர். இதில் 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர், தொழிற்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்நாதன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×