search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கவலை"

    • கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
    • சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

    உடுமலை :

    பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறந்தும் உரிய பலன் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சீசன் துவங்காத நேரத்தில் கொப்பரை உற்பத்தி குறைந்தும் விலை உயரவில்லை. காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, சாதாரண கொப்பரை கிலோ 80 ரூபாய்க்கும், ஸ்பெஷல் கொப்பரை 82 ரூபாய், தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 1,770 ரூபாய், கருப்பு தேங்காய் ஒரு டன் 27,500 ரூபாய் மற்றும் பச்சை தேங்காய் ஒரு டன் 25 ஆயிரம், தேங்காய் பவுடர் ஒரு கிலோ 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் தொடரும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சீசன் துவங்க உள்ள சூழலில் விலை சரிவு விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகி கூறியதாவது:- அடுத்த மாதம் தேங்காய் சீசன் துவங்க உள்ள நிலையில் கொப்பரை, தேங்காய் விலை உயரவில்லை. கொப்பரை உற்பத்தி செய்வதால் நஷ்டமே ஏற்படுவதால், பலரும் உற்பத்தி மேற்கொள்ளவில்லை.இதனால் உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சீசன் இல்லாத நேரத்திலும் விலை சரிவு ஏற்படுவது புரியாத புதிராகவே உள்ளது. தேங்காய் எண்ணெய், கொப்பரை தேக்கமடைந்துள்ளது. அரசு கொள்முதல் செய்த கொப்பரை என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை.

    இதற்கு ஒரே காரணமாக வெளிநாடுகளில் இருந்து பாமாயில், வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படுவதே காரணமாகும். இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு அதிக வரி விதித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்.தற்போது கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலையை குறைத்து வரும் எஸ்.எம்.எஸ்.,க்களும், விவசாயிகளிடம் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன.

    சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • விவசாயிகளின் 10 செம்மறியாடுகளை வெறி நாய்கள் கடித்துகுதறி கொன்றுள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்துள்ள மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான தேர்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களது பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு தொழிலாகும். கோழி மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து அதனை குண்டடம் மற்றும் கன்னிவாடி வாரச்சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதமாக விவசாயிகள் தங்கள் பட்டியில் அடைத்து வைத்திருக்கும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்தெரியும் வெறி நாய்கள் கடித்து குதறி ஆட்டின் ரத்தத்தை குடித்துவிட்டு சென்று விடுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக மணக்கடவு கிராமத்தில் வெறிநாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று காடுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆடுகளை துரத்தி துரத்தி கடித்து 200-க்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை குடித்து விடுகிறது. இதனால் அவை செத்தவிடுகின்றன.

    இந்த நிலையில் நாட்டுதுறை, பாலசுப்பிரமணி, அப்பு ஆகிய விவசாயிகளின் 10 செம்மறியாடுகளை வெறி நாய்கள் கடித்துகுதறி கொன்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் ஆர்.டி.ஓ.குமரேசனிடம் நாய்களைப்பிடிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக கூறி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ.குமரேசன் வெறி நாய்களை பிடிக்க உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நாய்களைப்பிடித்து காப்பகங்களில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்.மேலும் நாய்களின் இனப்பெருக்கத்தை குறைக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கோழிகளை திருடும் மர்ம ஆசாமிகளை கண்டறிய அப்பகுதியில் போலீசாரை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மனு கொடுக்க வந்த விவசாயிகள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

    • 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பெங்களூர், கொச்சி போன்ற வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கள் பிரதான தொழிலாக இங்கு உள்ளது. அடிக்கடி மாறிவரும் கால நிலை மாற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு தேவையான இடுப்பொருட்கள் உரம், பூச்சிக்கொல்லி, மருந்துகளின் விலை ஏற்றத்தாலும் தரமான காய்கறி விதை கிடைக்காமலும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கேரட் பயிர் 2200 ஹெக்டரிலும், உருளைக்கிழங்கு 1200 ஹெக்டரிலும், கோஸ் 900 ஹெக்டரிலும், மற்ற மலைக்காய்கறி 2700 ஹெக்டரிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் மலைக் காய்கறிகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரட் மற்றும் பீட்ரூட் விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெற்றே உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், திருச்சி, சென்னை மற்றும் நெல்லை உள்பட பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுதவிர பெங்களூர், கொச்சி போன்ற வேறு மாநிலங்களுக்கும் கேரட் மற்றும் பீட்ரூட் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது கர்நாடகா மாநிலத்தில இருந்து கேரட், பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீட்ரூட் விலை மிகவும் விலை குறைந்து விட்டது. கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்ற கேரட், பீட்ரூட் தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

    • அபிராமம் பகுதியில் மழை இல்லாததால் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
    • இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நீர்தாண்ட அச்சங்குளம், உடையநாதபுரம், நகரத்தார்குறிச்சி, நந்திசேரி, காடனேரி உட்பட பல்வேறு கிராமங்களில் சிறுதானிய பயிர்களான கம்பு, சோளம், குதிரை வாளி , எள் போன்ற பயிர்களை விவசாயம் செய்துவந்தனர் சிறுதானிய பயிர்களுக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

    அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க பண்ணை குட்டை வெட்டததால் போதிய பருவமழையின்றி சிறுதானிய பயிர்களை கூட காப்பாற்ற முடியத நிலை உள்ளது. இதனால் எள் போன்ற பயிர்களுக்கு கூட மழையை நம்ப வேண்டிய நிலை உள்ளது. அபிராமம் பகுதியில் மகசூல் தரவேண்டிய நிலையில் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.

    இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். போதிய பருவமழை இல்லததால் நெல் பயிர் கருகி வரும் நிலையில், சிறுதானிய பயிர்களும் மழையில்லததால் கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    • இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன்கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் பொங்கலுக்கு தேவயைான பொருட்கள் வழங்கப்படும்.இது தவிர ரொக்கத்தொகை, வேஷ்டி-சேலையும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஜனவரி 2-ந்தேதி முதல் அந்தந்த ரேசன் கடைகளில் இதனைபெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நிலக்கோட்டை, ெநாச்சிஓடைப்பட்டி, கூவனூத்து, சாணார்பட்டி, சிலுவத்தூர், அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விவசாயிகளிடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 300 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.20ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்திருந்த நிலையில் அரசு வாங்காததால் விளைவித்த கரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    மேலும் வியாபாரிகள் நேரடியாக கரும்பு விவசாயிகளிடம் வந்து குறைந்த விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். வேறு வழியின்றி நஷ்டமடைந்தாலும் அதனை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில்,

    ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பராமரித்து கரும்பை காப்பாற்றி வந்தோம். அரசு கொள்முதல் செய்தால் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். விளைச்சல் குறைந்துள்ள போதிலும் தற்போது கிடைத்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வருடம் முழுவதும் கரும்பு விவசாயத்தை நம்பியே ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

    ஆனால் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுவரும் வேளையில் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம் என்றார்.

    பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் இதனை ஆர்வமுடன் பயிரிட்டு வந்தனர். தற்போது அரசு அறிவித்துள்ள முடிவால் வரும் காலங்களில் கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல் போன்ற சராசரி மழையளவு கிடைக்காத மாவட்டங்களில் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் முன்னதாகவே வந்ததால் நிரம்பியது. அதனைத்தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே ஏரிக்கு வடவாறு வழியாக வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் விளைநி லங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலைய டைந்தனர். ஏரியின் பாது காப்பு கருதி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்ம ட்டம் வேகமாக குறைந்தது.

    தற்போது மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு மட்டும் 65 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் முன்னதாகவே வந்ததால் நிரம்பியது.

    அதனைத்தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே ஏரிக்கு வடவாறு வழியாக வரும் தண்ணீர் அணைத்தும் அப்படியே திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் விளைநி லங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கவலைய டைந்தனர். ஏரியின் பாது காப்பு கருதி கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்ம ட்டம் வேகமாக குறைந்தது. தற்போது மழையில்லா ததால் ஏரிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. எனவே ஏரியின் நீர்மட்டம் இன்று 44.60 அடியாக உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு மட்டும் 65 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • உபரி நீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் உபரி நீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

    பையர்நத்தம் ஊர் ஏரி சுமார்100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி தண்ணீர் முலம் பையர் நத்தம், பள்ளிப்பட்டி, லூர்துபுரம் என சுமார் 3 கிலே மீட்டர் தூரம் வரை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு, நிலத்தடி நீர் உயர்வுக்கு பெரும் பங்காற்றி வருகின்றது.

    சேர்வராயன் மலையி லிருந்து உற்பத்தியாகும் இந்த மீனாற்றில் போதக்காடு என்ற இடத்தில் குறுக்கே தடுப்பணை கட்டி கால்வாய் மூலமாக பையர்நத்தம் ஊர் ஏரிக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.

    கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து சில தினங்களுக்கு முன்பு ஏரி அதன் முழு கொள்ளளவை அடைந்தது.

    தற்போது உபரி நீர் வாய்க்கால் மூலமாக மோளையனூர் பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு செல்கிறது. தற்போது ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக சுத்தம் செய்து, வடிகால்வாய் அமைக்காததால், பையர்நத்தம் பகுதியில் உள்ள கழிவுநீரும் குப்பை கழிவு, பிளாஸ்டிக் கவர்கள், கண்ணாடி பாட்டில் போன்றவை கலந்து விவசாய நிலங்களை பாழ் படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நூறு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
    • விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மெனசி, அதிகாரப்பட்டி,உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டுபல நூறு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

    சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் மற்றும் கதிர்களிலும் படை புழு தாக்குதல் தற்பொழுது அதிகரித்து வருவதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    புழு தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி தடுப்பு நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறி உள்ளது.
    • தொடர் மழை காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

    கடலூர்:

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறி உள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

    நேற்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, விருதாச்சலம், புவனகிரி ,வடக்குத்து, வேப்பூர் மற்றும் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்து காலை வரை மழை பெய்து வந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு சாலை ஓரங்களில் பட்டாசு, துணிகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தொடர் மழை காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

    இது மட்டுமின்றி தற்போது கடலூர் மாவட்டத்தில் நிலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் கணிசமாக உயர்ந்து வருவதும் காண முடிகிறது இதன் காரணமாக விவசாய வேலைகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்திற்கு தொடர் மழை காரணமாக ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் மாடு ஒன்று இறந்து உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு - வடக்குத்து - 73.0, காட்டுமயிலூர் - 50.0, ஆட்சியர் அலுவலகம் - 49.0, கடலூர் - 48.4, லக்கூர் - 30.0, வேப்பூர் - 30.0, குறிஞ்சிப்பாடி - 26.0 , எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 25.0 , ஸ்ரீமுஷ்ணம் - 23.2, விருத்தாசலம் - 22.0, பெல்லாந்துறை - 20.2, பண்ருட்டி - 17.0, லால்பேட்டை - 16.0, வானமாதேவி - 15.0, குப்பநத்தம் - 14.4, கொத்தவாச்சேரி - 14.0, புவனகிரி - 14.0, சேத்தியாதோப்பு- 12.0, மீ-மாத்தூர் - 12.0, பரங்கிப்பேட்டை - 9.0, காட்டுமன்னார்கோயில் - 8.0, தொழுதூர் - 8.0,. சிதம்பரம் - 7.0,ழ்செருவாய் - 5.0, அண்ணாமலைநகர் - 3.0, மொத்தம் - 551.20 மிமீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • காட்டு பன்றிகள் கூட்டம் அவரது விளைநிலங்களில் புகுந்து வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்று அட்டகாசம் செய்துள்ளன.
    • வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.

    களக்காடு:

    களக்காடு தலையணை மலையடிவாரத்தில் உள்ள கள்ளியாறு பகுதியில் களக்காட்டை சேர்ந்த விவசாயி மல்லிகைராஜ்க்கு (வயது40) சொந்தமான விளைநிலங்கள் உள்ளன.

    வாழைகள்

    இதில் அவர் வாழை, பயிர் செய்துள்ளார். இந்நிலையில் காட்டு பன்றிகள் கூட்டம் அவரது விளைநிலங்களில் புகுந்து வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்று அட்டகாசம் செய்துள்ளன.

    இதனால் 50-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதனால் அவருக்கு ஆயிரக்கணக்கன ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தொடர் அட்டகாசம்

    இப்பகுதியில் ஏற்கனவே ஒற்றை காட்டு யானையும் தென்னை, பனை மரங்களை சாய்த்து வரும் நிலையில் காட்டு பன்றிகளும் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உயிரை பணயம் வைத்து, கடுமையாக போராடி வருகின்றனர். இதுபற்றி களக்காடு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முருகன் கூறியதாவது:-

    இழப்பீடு

    அதிகரித்து வரும் வனவிலங்குகள் அட்ட காசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.

    வனவிலங்குகள் அச்சுறுத்தலால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே யானை, காட்டு பன்றிகளை விளைநிலங்களுக்குள் வராமல் விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது.
    • செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    கடலூர்:

    தெற்கு ஆந்திரா பகுதியில் மேல்வளி மண்டல சுழற்றி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை நீடித்தது.

    கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, திருவந்திபுரம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை கொட்டியது.  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழையையொட்டி நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மழை விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஊடு பயிராக பயிரிட்டுள்ள செடிகளுக்கு இந்த மழை உகந்ததாக இல்லை என்றும், இதனால் செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை பற்றி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகா ரிகள் தீவிரமடைந்துள்ளனர்

    • கொப்பரை தேங்காய் ஏலம் விலை குறைவால் கவலையில் விவசாயிகள் அடைந்துள்ளனர்.
    • அதிக விலையாக ரூ.78. ஏலம் போனது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்ததுபோக மீதம் உள்ள பருப்பினை யும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    அங்கு கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 800மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப் பட்டுஏலம்விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ 73, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.78. ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோ விற்கு ரூ.4குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதே போல தேங்காய் களுக்காகநடந்தஏலத்தில் சுமார் 9900தேங்காய்கள் ஏலம்விடப்பட்டன.இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலைகுறைந்தவிலையாக ரூ.18, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.23 ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோ விற்கு ரூ.2குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ×