search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் கேரட், பீட்ரூட்டுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
    X

    நீலகிரியில் கேரட், பீட்ரூட்டுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

    • 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பெங்களூர், கொச்சி போன்ற வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கள் பிரதான தொழிலாக இங்கு உள்ளது. அடிக்கடி மாறிவரும் கால நிலை மாற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு தேவையான இடுப்பொருட்கள் உரம், பூச்சிக்கொல்லி, மருந்துகளின் விலை ஏற்றத்தாலும் தரமான காய்கறி விதை கிடைக்காமலும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கேரட் பயிர் 2200 ஹெக்டரிலும், உருளைக்கிழங்கு 1200 ஹெக்டரிலும், கோஸ் 900 ஹெக்டரிலும், மற்ற மலைக்காய்கறி 2700 ஹெக்டரிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் மலைக் காய்கறிகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரட் மற்றும் பீட்ரூட் விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெற்றே உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், திருச்சி, சென்னை மற்றும் நெல்லை உள்பட பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுதவிர பெங்களூர், கொச்சி போன்ற வேறு மாநிலங்களுக்கும் கேரட் மற்றும் பீட்ரூட் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது கர்நாடகா மாநிலத்தில இருந்து கேரட், பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீட்ரூட் விலை மிகவும் விலை குறைந்து விட்டது. கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்ற கேரட், பீட்ரூட் தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×