search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொப்பரை, தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை
    X

    கொப்பரை, தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

    • கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
    • சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

    உடுமலை :

    பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறந்தும் உரிய பலன் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சீசன் துவங்காத நேரத்தில் கொப்பரை உற்பத்தி குறைந்தும் விலை உயரவில்லை. காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, சாதாரண கொப்பரை கிலோ 80 ரூபாய்க்கும், ஸ்பெஷல் கொப்பரை 82 ரூபாய், தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 1,770 ரூபாய், கருப்பு தேங்காய் ஒரு டன் 27,500 ரூபாய் மற்றும் பச்சை தேங்காய் ஒரு டன் 25 ஆயிரம், தேங்காய் பவுடர் ஒரு கிலோ 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் தொடரும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சீசன் துவங்க உள்ள சூழலில் விலை சரிவு விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகி கூறியதாவது:- அடுத்த மாதம் தேங்காய் சீசன் துவங்க உள்ள நிலையில் கொப்பரை, தேங்காய் விலை உயரவில்லை. கொப்பரை உற்பத்தி செய்வதால் நஷ்டமே ஏற்படுவதால், பலரும் உற்பத்தி மேற்கொள்ளவில்லை.இதனால் உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சீசன் இல்லாத நேரத்திலும் விலை சரிவு ஏற்படுவது புரியாத புதிராகவே உள்ளது. தேங்காய் எண்ணெய், கொப்பரை தேக்கமடைந்துள்ளது. அரசு கொள்முதல் செய்த கொப்பரை என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை.

    இதற்கு ஒரே காரணமாக வெளிநாடுகளில் இருந்து பாமாயில், வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படுவதே காரணமாகும். இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு அதிக வரி விதித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்.தற்போது கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலையை குறைத்து வரும் எஸ்.எம்.எஸ்.,க்களும், விவசாயிகளிடம் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன.

    சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×