search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயலாக வாய்ப்பு"

    • காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறி உள்ளது.
    • தொடர் மழை காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

    கடலூர்:

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று மாறி உள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

    நேற்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, விருதாச்சலம், புவனகிரி ,வடக்குத்து, வேப்பூர் மற்றும் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்து காலை வரை மழை பெய்து வந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு சாலை ஓரங்களில் பட்டாசு, துணிகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தொடர் மழை காரணமாக வியாபாரிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

    இது மட்டுமின்றி தற்போது கடலூர் மாவட்டத்தில் நிலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் கணிசமாக உயர்ந்து வருவதும் காண முடிகிறது இதன் காரணமாக விவசாய வேலைகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்திற்கு தொடர் மழை காரணமாக ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் மாடு ஒன்று இறந்து உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு - வடக்குத்து - 73.0, காட்டுமயிலூர் - 50.0, ஆட்சியர் அலுவலகம் - 49.0, கடலூர் - 48.4, லக்கூர் - 30.0, வேப்பூர் - 30.0, குறிஞ்சிப்பாடி - 26.0 , எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 25.0 , ஸ்ரீமுஷ்ணம் - 23.2, விருத்தாசலம் - 22.0, பெல்லாந்துறை - 20.2, பண்ருட்டி - 17.0, லால்பேட்டை - 16.0, வானமாதேவி - 15.0, குப்பநத்தம் - 14.4, கொத்தவாச்சேரி - 14.0, புவனகிரி - 14.0, சேத்தியாதோப்பு- 12.0, மீ-மாத்தூர் - 12.0, பரங்கிப்பேட்டை - 9.0, காட்டுமன்னார்கோயில் - 8.0, தொழுதூர் - 8.0,. சிதம்பரம் - 7.0,ழ்செருவாய் - 5.0, அண்ணாமலைநகர் - 3.0, மொத்தம் - 551.20 மிமீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×