search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வால்பாறை"

    • அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்தார்.
    • 7 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது.

    கோவை

    வால்பாறை ெதாகுதி அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    வால்பாறை மக்கள் பயன்பெறும் வகையில் முடீஸ் பகுதியில் தொழில் பயிற்சி நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டும். தேயிலைதோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 425 ரூபாய் 40 பைசா என நிர்ணயம் செய்து கடந்த ஆண்டு தமிழக அரசால் வரைவு ஆணை வெளியிடப்பட்டது.

    இறுதி ஆணை வெளியிடாததால் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இறுதி அரசாணை வெளியிட வேண்டும். வனவிலங்கு மோதல் அதிகமாக இருப்பதால் வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி பாதுகாப்பு வேலி மற்றும் அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வால்பாறை பகுதி சிறந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. அதனை மேம்படுத்த முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட படகு இல்லம், பூங்கா ஆகியவற்றை உடனடியாக திறக்க வேண்டும்.வால்பாறை நகரத்திற்கு பொள்ளாச்சியில் இருந்து மாற்றுப்பாதையும் வால்பாறை மலைப்பகுதிக்கு கீழ் பகுதியில் இருந்து ரோப்கார் அல்லது வின்ச் வசதி செய்து தர வேண்டும்.

    ஆனைமலையில் தீயணைப்பு நிலையம், கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை கம்பாலப்பட்டி கூட்டுகுடிநீர் குழாய்கள் மிகவும் பழுதாகி, ஒரு பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக சீரமைத்து திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காளியப்ப கவுண்டன்புதூர் கிரா மத்தில் தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக மாற்ற வேண்டும். சர்க்கார்பதி, பவர்ஹவுஸ் இடத்தில் மலைவாழ் மக்கள் வசதித்து வருகிறார்கள். அங்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    பி.ஏ.பி. பாசன திட்டத்தில் வேட்டைக்கா ரன்புதூர் பகுதியில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது. இந்த நிலங்களை ஆயக்கட்டில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர்.
    • சேவை பிரச்சினை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க முடிய வில்லை.

    கோவை

    கோவை மாவட்டம் வால்பாறை நகரம் மற்றும் தேயிலை தோட்டங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்யவும், பயணத்தை கைவிடும் போது டிக்கெட்டை ரத்து செய்யவும் வால்பாறையில் இருந்து 3 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்து பொள்ளாச்சிக்கும், உடுமலைக்கு செல்ல வேண்டியது உள்ளது.

    ரெயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும். காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்கள் ரெயில் புறப்படும் அரை மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டில் ரூ.35, குளிர்சாதன வசதி கொண்ட டிக்கெட்டில் ரூ.60 பிடித்தம் செய்து கொண்டு, மீதி தொகை பயணிகளுக்கு கிடைக்கும்.

    ஆனால் வால்பாறையில் முன்பதிவு மையம் வசதி இல்லாததால் காலதாமதமாக வந்து டிக்கெட்டை ரத்து செய்தால் முழு தொகையும் இழக்க நேரிடும். இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதனையடுத்து வால்பாறையில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். இந்தநிலையில் வால்பாறையில் தெற்கு ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் ெதாடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இணையதள சேவை குறைபாட்டால் முன்பதிவு தொடங்கப்படாமல் இருந்தது.

    இதனையடுத்து வால்பாறை தபால் நிலையத்தில் பாலக்காடு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அங்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டது.

    இது குறித்து வால்பாறை தபால் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    இணையதள சேவை பிரச்சினை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க முடிய வில்லை. தற்போது பிரச்சி னை சரிசெய்ய ப்பட்டதால் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. வேலை நாட்களில் பொதுமக்கள் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி ரெயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.    

    • அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.
    • பள்ளியை சுற்றியுள்ள புதற் செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை:

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் கரடிகள் நடமாட்டத்தை பார்த்த பகுதி மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.

    வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் நட மாட்டம் அதிகரித் துள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர். யானை, சிறுத்தை நட மாட்டம் மட்டுமே காணப்பட்டு வந்த நிலையில் தற ்போது எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் நட மாட்டம் காணப் படுவதாக கூறுகி றார்கள்.

    இந்நிலையில் வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளாகத்தில் 3 குட்டிகளுடன் 2 கரடிகள் நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

    இதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளியை சுற்றியுள்ள புதற் செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் அங்கு வேட்டை தடுப்பு காவலர்களைக் கொண்டு கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    • மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
    • கோவை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    கோவை

    கோவை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த மழை கொட்டி தீர்த்து. இதனால் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    வால்பாறை பி.ஏ.பி-73, வால்பாறை தாலுகா-69, வேளாண் பல்கலைக்கழகம்-59, சின்னக்கல்லார்-55, சோலையார்-53, சின்கோனா-50, கோவை தெற்கு-42, மேட்டுப்பாளையம்-33. 

    • கடையில் பொருட்களை தின்றும், தூக்கி எறிந்தும் சேதப்படுத்தியது.
    • யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனைமலை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லமுடி- பூஞ்சோலை எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது.

    இந்த தேயிலை தோட்ட நிர்வாகத்தின் கீழ் அங்கு ஒரு டீக்கடையும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ராஜா வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியில் வந்த 7 காட்டு யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

    வெகுநேரமாக அங்கேயே சுற்றிதிரிந்த யானை கூட்டம், அங்குள்ள ராஜாவின் டீக்கடை அருகே சென்று கடையை உடைத்து உள்ளே புகுந்தது.பின்னர் அங்குள்ள பொருட்களை தின்றும், தூக்கி எறிந்தும் சேதப்படுத்தியது. பின்னர் யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டன.இன்று காலை ராஜா கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியானார்.

    அப்போது யானை கடையை உடைத்து பொருட்களை சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதம் அடைந்த கடையை பார்வையிட்டனர்.

    மேலும் சம்பவம் குறித்து அங்கிருந்த மக்களிடமு ம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மக்கள் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வெளியில் நடமாட அச்சமாக உள்ளது. எனவே யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குடியிருப்பையொட்டிய பகுதியிலேேய முகாமிட்ட இந்த காட்டு யானை அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
    • அந்த வழியாக வந்த வாகனங்களை ஆங்காங்கே வாகன ஓட்டிகள் நிறுத்தி வைத்தனர்.

    பொள்ளாச்சி :

    கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதி களையொட்டி அடர்ந்த வனம் காணப்படுகிறது. இந்த வனங்களில் சிறுத்தை, மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.குறிப்பாக யானைகள் கூட்டம் எஸ்டேட்டை ஒட்டிய குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்துவதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

    இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்திலும், கவலையிலும் உள்ளனர்.இந்த நிலையில் வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி வந்தது.குடியிருப்பையொட்டிய பகுதியிலேேய முகாமிட்ட இந்த காட்டு யானை அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

    தொடர்ந்து அங்கு முகாமிட்ட யானை நேற்று மாலை சிறுகுன்றா சாலையில் சுற்றி திரிந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்களை ஆங்காங்கே வாகன ஓட்டிகள் நிறுத்தி வைத்தனர். நீண்ட நேரம் அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை பின்னர் அங்கிருந்து எஸ்டேட் பகுதிக்குள் சென்றது.

    அதன்பின்னரே வாகன ஓட்டிகள் வாகனத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சஜிதா வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டு இருந்தார்.
    • போலீசார் மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 41). கூலி தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா குமாரி (38). இவர்களது மகள் சஜிதா (15).

    இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சஜிதா வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் அருகில் இருந்த மரமேஜை மீது மோதியது. இதில் தொட்டில் இருந்த சஜிதாவின் தலை மற்றும் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சஜிதாவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொட்டிலில் விளையாடிய சிறுமி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வன விலங்குகளை காண்பிப்பதாக கூறி சில சுற்றுலா கார் டிரைவர்கள் இரவு நேரத்தில் அழைத்துச் செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகளை இரவு நேரத்தில் வெளியே அனுப்பிய தங்கும் விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மலைப்பகுதியான வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் வன விலங்குகளை காண்பிப்பதாக கூறி சில சுற்றுலா கார் டிரைவர்கள் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று காலையில் மீண்டும் தங்கும் விடுதிக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

    இதுபோன்ற செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வனத்துறை சார்பில் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு இரவு நேர டிரக்கிங் என்ற பெயரில் சுற்றுலாபயணிகளை வெளியே அனுப்பக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் வனத்துறையினர் இரவில் ரோந்து சென்றபோது கருமலை எஸ்டேட் பகுதி வழியாக வந்த 2 வாகனங்களை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர். அப்போது வன விலங்குகளை காண சுற்றுலாபயணிகளை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இரு வாகனங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் வாகன டிரைவர்களான ஜீவா (வயது 29), கலையரசன் (32) ஆகியோருக்கு வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலும் சுற்றுலா பயணிகளை தங்க வைத்து இரவு நேரத்தில் வெளியே அனுப்பிய அய்யர்பாடி எஸ்டேட்டில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.  

    • வால்பாறையில் இன்று காலை சம்பவம்
    • செடிகளுக்கு மருந்து அடித்து கொண்டு இருந்தார்.

    பொள்ளாச்சி,

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புதுவா ஓரான் (வயது 29). கடந்த சில வருடங்களுக்கு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். பின்னர் மானாம்பள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட செங்குத்துப்பாறையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    புதுவா ஓரான் இன்று காலை 8.50 மணியளவில் எஸ்டேட்டில் உள்ள செடிகளுக்கு மருந்து அடித்து கொண்டு இருந்தார். அப்போது புதருக்குள் மறைந்து இருந்த கரடி திடீரென புதுவா ஓரானை தாக்கியது. இதனை பார்த்து பயந்த அவர் தப்பி ஓடினார். ஆனால் அவரை கரடி விரட்டி சென்று தாக்கியது. கரடியிடம் இருந்து தப்பிக்க அவர் போராடினார். ஆனால் அவரது கால் மற்றும் உடலில் கரடி தாக்கியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவர் விரைந்து வந்து புதுவா ஓரானை தாக்கிய கரடியை சத்தம் எழுப்பி காட்டுக்குள் விரட்டினர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால் இன்று 4-வது நாளாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    வால்பாறை:

    கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறையிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.

    பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் மலைப் பாதையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இதனால் 3-வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 9-வது கொண்டை ஊசி வளைவு வரையிலும் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் சாலை பெயர்ந்து உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிவைடர்கள் மற்றும் மணல் மூட்டைகளை வைத்து யாரும் செல்லாதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

    மண் சரிவை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வாகனங்களை ஆழியாறு அருகே உள்ள சோதனை சாவடியில் வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் வால்பாறை வாழைத் தோட்டம் ஆற்றின் நீர் அப்பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்குள் புகுந்து டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் டீசல் கிடைக்காமல் அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க முடியவில்லை. வால்பாறைக்கு கன ரக வாகனங்கள் செல்ல முடியாததால் டீசல், காய்கறி உள்ளிட்ட பொருட்களை வெளியூரில் இருந்து கொண்டு செல்ல முடியவில்லை.

    இன்று 4-வது நாளாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் கன ரக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கேரளாவிற்கு எந்த வாகனமும் செல்லவில்லை. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வால்பாறையில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    ×