search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant roaming"

    • குடியிருப்பையொட்டிய பகுதியிலேேய முகாமிட்ட இந்த காட்டு யானை அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
    • அந்த வழியாக வந்த வாகனங்களை ஆங்காங்கே வாகன ஓட்டிகள் நிறுத்தி வைத்தனர்.

    பொள்ளாச்சி :

    கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதி களையொட்டி அடர்ந்த வனம் காணப்படுகிறது. இந்த வனங்களில் சிறுத்தை, மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.குறிப்பாக யானைகள் கூட்டம் எஸ்டேட்டை ஒட்டிய குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்துவதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

    இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்திலும், கவலையிலும் உள்ளனர்.இந்த நிலையில் வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி வந்தது.குடியிருப்பையொட்டிய பகுதியிலேேய முகாமிட்ட இந்த காட்டு யானை அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

    தொடர்ந்து அங்கு முகாமிட்ட யானை நேற்று மாலை சிறுகுன்றா சாலையில் சுற்றி திரிந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்களை ஆங்காங்கே வாகன ஓட்டிகள் நிறுத்தி வைத்தனர். நீண்ட நேரம் அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை பின்னர் அங்கிருந்து எஸ்டேட் பகுதிக்குள் சென்றது.

    அதன்பின்னரே வாகன ஓட்டிகள் வாகனத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×