என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரடி தாக்கி வடமாநில வாலிபர் படுகாயம்
- வால்பாறையில் இன்று காலை சம்பவம்
- செடிகளுக்கு மருந்து அடித்து கொண்டு இருந்தார்.
பொள்ளாச்சி,
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புதுவா ஓரான் (வயது 29). கடந்த சில வருடங்களுக்கு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். பின்னர் மானாம்பள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட செங்குத்துப்பாறையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
புதுவா ஓரான் இன்று காலை 8.50 மணியளவில் எஸ்டேட்டில் உள்ள செடிகளுக்கு மருந்து அடித்து கொண்டு இருந்தார். அப்போது புதருக்குள் மறைந்து இருந்த கரடி திடீரென புதுவா ஓரானை தாக்கியது. இதனை பார்த்து பயந்த அவர் தப்பி ஓடினார். ஆனால் அவரை கரடி விரட்டி சென்று தாக்கியது. கரடியிடம் இருந்து தப்பிக்க அவர் போராடினார். ஆனால் அவரது கால் மற்றும் உடலில் கரடி தாக்கியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவர் விரைந்து வந்து புதுவா ஓரானை தாக்கிய கரடியை சத்தம் எழுப்பி காட்டுக்குள் விரட்டினர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.