search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்ப்பு"

    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.
    • 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா , ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் , தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் , பிரதமமந்திரி கௌசல் விகாஸ் யோஜனா , மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், 4 சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி பயிற்சிகள், சில்லரை விற்பனை வணிகம், பி.பி.ஓ., துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.

    இப்பயிற்சிக்கு இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்யும் பொருட்டு இளைஞர் திறன் திருவிழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, முகாமில் பள்ளிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் கலந்து கொண்டு பயிற்சியினை தேர்வு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மின்சாதனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
    • பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    திருவையாறு:

    திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

    கனமழையினால் ஆங்கா ங்ககே மின்பாதைகளில் பழுது ஏற்பட்டு அடிக்கடியும் தொடர்ந்தும் மின்வெட்டு ஏற்படுவதால் வீடுகளில் சிற்றுண்டி முதலிய சமையல் வேலைகள் பாதிக்கப்படுகிறது.

    ஹோட்டல்களில் சிற்றுண்டி முதலிய உணவுகள் தயாரிக்க மிக்சி கிரைண்டர் முதலிய மின்சாதனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ஹோட்ட ல்கள் மூடப்பட்டுள்ளன.

    இதனால், வாடிக்கையாளர்களும் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து கனமழை பொழிவதால் குண்டும் குழியுமான சாலைகளில்.

    மழைநீரும் கழிவுநீரும் தேங்கி சாலையில் நடக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    இதனை தடுக்க முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற 10 பேருக்கு அரசு உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது
    • 6 பேர் முதன்முதலாக எழுதினர்

    பெரம்பலூர்:

    இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்களில் அரசு பள்ளிகளை சேர்ந்த 263 மாணவ-மாணவிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 23 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 286 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த 15 மாணவர்களும், 30 மாணவிகளும், அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளியை சேர்ந்த 5 மாணவிகளும் என மொத்தம் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அரசு இட ஒதுக்கீடு

    தமிழக அரசின் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 7 மாணவிகளும், 3 மாணவர்களும் என மொத்தம் 10 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த 10 பேரில் 6 பேர் முதல் முறையாக எழுதிய 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் முதல் மதிப்பெண் 399 ஆகும். அந்த மதிப்பெண்ணை சுபாஷினி என்ற மாணவி பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளையும், அதில் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளவர்களையும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 188 மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதியதில், 25 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 6 பேர் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்."

    • எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி.
    • ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வால்ரஸ் நிறுவனம் பின்னலாடை தொழிலுக்கு தேவையான பாலியஸ்டர் துணிகளை திருப்பூர் மட்டுமின்றி, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வால்ரஸ் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியிலும், திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக அனைத்து தரப்பினருக்குமான ரெடிமேடு ஆடைகளை தயாரித்து, வால்ரஸ் நிறுவனத்திடமே வழங்கும் தொழில் வாய்ப்பையும் வால்ரஸ் நிறுவனம் நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாய்வீடு மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்புகள் இணைந்து ஏழை, எளியோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தாய்வீடு அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு விற்பனை செய்யப்படும் துணிகள் மற்றும் ஆடைகளை பார்வையிட்ட பின்பு, வால்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட்டுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    வால்ரஸ் நிறுவனம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. அந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தாய்வீடு அமைப்பு வால்ரஸ் நிறுவனத்தின் எஸ் இந்தியா கேன் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளது. தென் மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த தொழில் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம்.

    மாணவர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய முன்வரலாம். குறிப்பாக குடும்பத்தை முன்னேற்றும் இடத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தாய்வீடு, வால்ரஸ் எஸ் இந்தியா கேன் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பணி வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பேரில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கடந்த 9-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 8 நபர்கள் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் தையல் பயிற்சிக்கும், 14 நபர்கள் முதல்நிலை நேர்முக தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை நேர்முக தேர்வுக்கும், 20 நபர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கும், ஒரு நபர் சிறுதொழில் அமைக்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பணி ஆணையை வழங்கினார்.

    இதுகுறித்து வேலை வாய்ப்பு பெற்ற கருங்கல் பாளையம் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கூறியதாவது:

    எனக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். எனது கணவர் திடீரென கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். இதனால் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பெரும் துயரத்தில் இருந்த எங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் புதிய வழியை காட்டியுள்ளது.

    நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். விரைவில் பணியில் இணைகிறேன். இதன் மூலம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் என்னால் உழைத்து எனது மகளை காப்பாற்ற முடியும்.

    இந்த நம்பிக்கை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சர், அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு சேலம் மாவட்டத்தில் வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 08.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் " வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக" பணிபுரிய அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களில் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன், தங்களது விருப்பக் கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்–பத்தை தாங்கள் பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)யிடம் வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.

    அவ்வாறு பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீ–லிக்கப்படுவர் என்பதால் இவ்வறிவிப்பிற்கு ஏற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×