search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical equipment"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது.
    • குடியிருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது. பலத்த காற்றினால் அப்பகு தியில் உள்ள மரக்கிளையில் மின் கம்பி உரசியது. இத னால் அப்பகுதி குடியி ருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து, அங்கு வந்த மின்வாரிய ஊழி யர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின் கம்பியில் உரசிய மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பேட்டை, நல்லியாம்பா ளையம் மற்றும் சக்ரா நகர் பகுதிகளில் மின் கம்பிகளில் மரக்கிளை உரசி வருவதால் அப்பகுதியில் உள்ள மரக்கி ளைகளை மின்வாரியத்தி னர் அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • நிறுவனத்துக்குள் புகுந்து காப்பர் வயர், அலுமினிய வயர், பீஸ் கட்டை உள்ளிட்ட மின் உபகரணப் பொருட்களை திருடிச் சென்றனர்
    • பொருட்கைள திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே மதுராபுரி - அழகாபுரி சாலையில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உப்புக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இந்த நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காப்பர் வயர், அலுமினிய வயர், பீஸ் கட்டை உள்ளிட்ட மின் உபகரணப் பொருட்களை திருடிச் சென்றனர். மறு நாள் நிறுவனத்துக்கு சென்ற நாகராஜ் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அல்லிநகரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் உபகரணப் பொருட்கைள திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மின்சாதனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
    • பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    திருவையாறு:

    திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

    கனமழையினால் ஆங்கா ங்ககே மின்பாதைகளில் பழுது ஏற்பட்டு அடிக்கடியும் தொடர்ந்தும் மின்வெட்டு ஏற்படுவதால் வீடுகளில் சிற்றுண்டி முதலிய சமையல் வேலைகள் பாதிக்கப்படுகிறது.

    ஹோட்டல்களில் சிற்றுண்டி முதலிய உணவுகள் தயாரிக்க மிக்சி கிரைண்டர் முதலிய மின்சாதனங்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ஹோட்ட ல்கள் மூடப்பட்டுள்ளன.

    இதனால், வாடிக்கையாளர்களும் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து கனமழை பொழிவதால் குண்டும் குழியுமான சாலைகளில்.

    மழைநீரும் கழிவுநீரும் தேங்கி சாலையில் நடக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    இதனை தடுக்க முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொன்னேரியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இலவம்பேடு இருளர் காலனி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்கரை ஓரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

    ஏரிகள் என்பதால் பாம்பு மற்றும் வி‌ஷ பூச்சிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, மின் விசிறி, செட்டாப் பாக்ஸ் போன்ற பொருட்கள் பழுதாகி விடுகின்றன.

    அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளதாகவும் இதை பலமுறை மின்சார வாரியத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் ஏரிக்கரையில் உள்ள தாங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தாங்கள் இருளர் இன மக்கள் என்பதால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். உடனே இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×