search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்"

    • போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர்.
    • ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 65) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் இவர் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அப்போது 2 கார்களில் 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்து கூச்சலிட்டு உள்ளனர்.

    வெளியே வராத ஞானசேகர், வீட்டின் உள்ளே இருந்து யார் என கேட்டுள்ளார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஜே.பி.சண்முகம் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார் என தெரிவித்தனர்.

    அப்படி யாரையும் எனக்கு தெரியாது என கூறி கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கதவை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    உடனடியாக ஞானசேகர் முசிறி போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். போலீஸ் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது அதில் பதிவான காட்சிகளை பரிசோதித்த போது தகராறில் ஈடுபட்டது முசிறி அருகே, வெள்ளூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் மெக்கானிக் செந்தில் (40) , ஜவேலி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் ஜே.பி.சண்முகம் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் செய்து வரும் ஞானசேகர் ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருப்பதை அறிந்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சண்முகம் மாவட்ட செயலாளர் ஆகவும், செந்தில் ஒன்றிய பொறுப்பாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மண்டல செயலாளர் இன்பராஜ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஒப்பனையாள்புரம் காலனி குடியிருப்பு பகுதியில் சுடுகாடு அமைவதை வருவாய்த்துறையினர் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் கணேசன், ஊர் நாட்டாமைகள் பொன்ராஜ், காளிராஜ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் நெல்லையப்பன், சண்முகசுதாகர், தலைமை நிலைய செயலாளர் சேகர், மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, பொருளாளர் வெள்ளத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் கோபி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, இன்பராஜ், சந்தன மாரியப்பன், வேல்முருகன், பெரிய துரை, மங்களராஜ், ராஜ்குமார், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

    • எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி.
    • ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வால்ரஸ் நிறுவனம் பின்னலாடை தொழிலுக்கு தேவையான பாலியஸ்டர் துணிகளை திருப்பூர் மட்டுமின்றி, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வால்ரஸ் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியிலும், திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக அனைத்து தரப்பினருக்குமான ரெடிமேடு ஆடைகளை தயாரித்து, வால்ரஸ் நிறுவனத்திடமே வழங்கும் தொழில் வாய்ப்பையும் வால்ரஸ் நிறுவனம் நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாய்வீடு மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்புகள் இணைந்து ஏழை, எளியோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தாய்வீடு அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு விற்பனை செய்யப்படும் துணிகள் மற்றும் ஆடைகளை பார்வையிட்ட பின்பு, வால்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட்டுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    வால்ரஸ் நிறுவனம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. அந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தாய்வீடு அமைப்பு வால்ரஸ் நிறுவனத்தின் எஸ் இந்தியா கேன் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளது. தென் மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த தொழில் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம்.

    மாணவர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய முன்வரலாம். குறிப்பாக குடும்பத்தை முன்னேற்றும் இடத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தாய்வீடு, வால்ரஸ் எஸ் இந்தியா கேன் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×