சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

மண்டல செயலாளர் இன்பராஜ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஒப்பனையாள்புரம் காலனி குடியிருப்பு பகுதியில் சுடுகாடு அமைவதை வருவாய்த்துறையினர் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் கணேசன், ஊர் நாட்டாமைகள் பொன்ராஜ், காளிராஜ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் நெல்லையப்பன், சண்முகசுதாகர், தலைமை நிலைய செயலாளர் சேகர், மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, பொருளாளர் வெள்ளத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் கோபி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, இன்பராஜ், சந்தன மாரியப்பன், வேல்முருகன், பெரிய துரை, மங்களராஜ், ராஜ்குமார், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com