search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழை, எளிய பெண்களுக்கு தொழில் வாய்ப்பு - தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் பேட்டி
    X

    தாய்வீடு அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன், வால்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் ஆகியோர் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

    ஏழை, எளிய பெண்களுக்கு தொழில் வாய்ப்பு - தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் பேட்டி

    • எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி.
    • ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வால்ரஸ் நிறுவனம் பின்னலாடை தொழிலுக்கு தேவையான பாலியஸ்டர் துணிகளை திருப்பூர் மட்டுமின்றி, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வால்ரஸ் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியிலும், திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக அனைத்து தரப்பினருக்குமான ரெடிமேடு ஆடைகளை தயாரித்து, வால்ரஸ் நிறுவனத்திடமே வழங்கும் தொழில் வாய்ப்பையும் வால்ரஸ் நிறுவனம் நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாய்வீடு மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்புகள் இணைந்து ஏழை, எளியோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தாய்வீடு அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு விற்பனை செய்யப்படும் துணிகள் மற்றும் ஆடைகளை பார்வையிட்ட பின்பு, வால்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட்டுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    வால்ரஸ் நிறுவனம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. அந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தாய்வீடு அமைப்பு வால்ரஸ் நிறுவனத்தின் எஸ் இந்தியா கேன் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளது. தென் மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த தொழில் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம்.

    மாணவர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய முன்வரலாம். குறிப்பாக குடும்பத்தை முன்னேற்றும் இடத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தாய்வீடு, வால்ரஸ் எஸ் இந்தியா கேன் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×