search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கறிஞர்"

    • வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்றது

    கரூர்

    மத்திய அரசு இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் 3 முக்கிய பிரிவான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துகளில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துகளும் புதிதாக திணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் கருத்துகளை கேட்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினை உடனே திரும்ப பெற கோரியும் நேற்று கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு கரூர் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பார்த்திபன், செயலாளர் தமிழ்வாணன், நன்மாறன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

    • வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரிகள் வழக்கறிஞர்கள்சந்திவுரபாண்டி, குரு தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவராக முத்துமணி, துணைத்தலைவர்களாக கார்த்திக்கேயன், தங்கபாண்டி, செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச்செயலாளர்களாக சிவராமன், காசிநாதன், பொருளாளராக அழகர்சாமி, நூலகராக துரைமுருகன், செயற்குழு உறுப்பினர்களாக ராமர், கார்த்திக்குமார், நேதாஜி, வீரமாரி பாண்டியன், நாச்சியார், கோபி, கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், அரசு வழக்கறிஞர்கள் மோகன்குமார், பார்த்தசாரதி, மகேஷ், மூத்த வழக்கறிஞர்கள் செல்வகுமார், அழகேசன், முத்துராமலிங்கம், வெள்ளைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×