search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் சீசன் 2018"

    4-வது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் குறித்து தான் யோசிக்கவில்லை என்று 162 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #INDvWI #RohitSharma
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்க 377 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் (38), விராட் கோலி (16) ஆட்டமிழந்த நிலையில் ரோகித் சர்மா, அம்பதி ராயுடு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    137 பந்தில் 162 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா ஆட்டமிழக்கும்போது 37 பந்துகள் மீதம் இருந்தது. இதனால் ரோகித் சர்மா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்முனையில் இருந்த அம்பதி ராயுடும் இந்த கருத்தை கூறியுள்ளார். ஆனால் நான் இரட்டை சதம் குறித்து யோசிக்கவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘எதிர்முனையில் இருந்த அம்பதி ராயுடு என்னிடம், உங்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால், நான் எனது ஆட்டத்தில்தான் கவனம் செலுத்தி வந்தேன். இரட்டை சதம் கறித்து யோசிக்கவில்லை. நான் மூன்று இரட்டை சதம் அடித்துள்ளார். அந்த மூன்றையும் அடிப்பேன் என்று நினைத்தது கூட கிடையாது’’ என்றார்.
    அம்பதிராயுடு புத்திசாலி என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். #viratkohli #INDvWI

    மும்பை:

    4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

    மும்பையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்தது. ரோகித்சர்மா 137 பந்தில் 162 ரன்னும் (20 பவுண்டரி, 4 சிக்சர்), அம்பதிராயுடு 81 பந்தில் 100 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 36.2 ஓவரில் 152 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 224 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 50 ரன் எடுத்தார். கலீல் அகமது, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

     


    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-

    3-வது போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களுக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டது. அதில் இருந்து நாங்கள் தற்போது மீண்டு வந்துள்ளோம். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய துறைகளிலும் எங்களது செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது.

    அம்பதிராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு 2019 உலக கோப்பை வரை அணி துணை நிற்கும். அவரது விளையாட்டு நன்றாக இருக்கிறது.

    ஒரு நாள் போட்டி அணிக்கு 4-வது வீரர் வரிசை சரியாக அமையவில்லை. தற்போது ஒரு புத்திசாலி அந்த இடத்தை நிரப்பி இருப்பது மகிழ்ச்சி.

    இதே போல் பந்து வீச்சிலும் நாங்கள் பல்வேறு சோதனைகளை மேற் கொண்டு வருகிறோம். அதனால்தான் கலீல் அகமதுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2015-ல் உலக கோப்பைக்கு பிறகு 4-வது வீரர் வரிசை இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறது. 4-வது வரிசையில் களம் இறங்கி கடந்த சில தினங்களில் சதம் அடித்த 3-வது இந்திய வீரர் அம்பதிராயுடு ஆவார். மனிஷ்பாண்டே, யுவராஜ் ஆகியோர் மட்டுமே இந்த வரிசையில் சதம் அடித்து இருந்தனர்.

    அம்பதிராயுடு குறித்து ரோகித் சர்மா கூறும்போது, “4-வது வீரர் வரிசைக்கு அம்பதிராயுடுவே பொருத்தமானவர். உலக கோப்பை வரை அவர் அந்த வரிசையில் ஆடுவார். யாரும் அதுபற்றி இனி கேள்வி எழுப்ப இயலாது. நெருக்கடியான நிலையில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்” என்றார்.

    தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறும்போது, “எங்கள் அணி வீரர்கள் முழு பலத்துடன் ஆடவில்லை. இதுதான் எங்களின் மோசமான தோல்விக்கு காரணம். தேவையில்லாத ரன் அவுட்டுகளும் எங்களது பேட்டிங்கை சீர் குலைத்து விட்டது. அடுத்த போட்டிகளில் இது தவிர்க்கப்படும். இதே போல வீரர்கள் தேர்விலும் மாற்றம் செய்யப்படும்” என்றார்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 5-வது மற்றும் கடைசி ஆட்டம் வருகிற 1-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. #viratkohli #INDvWI

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2018 #NorthEastUnitedFC #JamshedpurFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூர் எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் பர்த்தலோமியூ முதல் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த்ஈஸ்ட் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜாம்ஷெட்பூர் அணியை சேர்ந்த பருக் சவுத்ரி 49-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். அதன்பின்னர், ஆட்டத்தின் இறுதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. #ISL2018 #NorthEastUnited #JamshedpurFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி பெற்றது. #ISL2018 #FCGoa #MumbaiCityFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் எப்.சி. கோவா அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோவா அணியினர் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் பெரான் கரோமினஸ் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என கோவா அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் ஜாக்சந்த் சிங் ஒரு கோலும், 61-வது நிமிடத்தில் எடு பீடியா ஒரு கோலும், 84 மற்றும் 90 வது நிமிடத்தில் பலங்கா பெர்னாண்டசும் கோல் அடித்தனர்.

    இறுதியில், எப்.சி. கோவா அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கோவா முதல் இடத்துக்கு முன்னேறியது. #ISL2018 #FCGoa #MumbaiCityFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை இரண்டு அணியினரும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

    இறுதியில், சென்னையின் எப்.சி. அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    புனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் எப்.சி புனே சிட்டி அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புனேவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. முதல் பாதியின் இறுதியில் பெங்களூரு அணியை சேர்ந்த சுனில் சேத்ரி அடுத்தடுத்து 41 மற்றும் 43 வது நிமிடங்களில் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

    இதையடுத்து, முதல் பாதியில் பெங்களூரு அணி 2-0 என முன்னிலை வகித்தது. பெங்களூரு அணியினரின் ஆட்டத்துக்கு புனே அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.



    ஆட்டத்தின் 64வது நிமிடத்தால் மிக்கு ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்ட நேர இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி புனே அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில்  முதலிடத்தையும் பெற்றுள்ளது. #ISL2018 #BengaluruFC #FCPuneCity
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDvWI #ODI #ViratKohli #rohitsharma
    கவுகாத்தி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இரண்டு டெஸ்டிலும் அந்த அணி 3 நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்ததாக இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம்  கவுகாத்தியில் இன்று நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. 

    இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேர்த்தியான விளையாட்டை முன்னெடுத்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தவான் வந்த வேகத்தில் திரும்பினார். இதனையடுத்து நின்று விளையாடிய விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அதிரடியை காட்டினர். விராட் கோலி சதம் கடத்து விளையாடிய நிலையில் மறுபுறம் ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்ய அபாரம் காட்டினார். பந்துகளை பவுண்டரி லைனை நோக்கி சிதறடித்து விளையாடிய விராட் கோலி 32.6 வது ஓவரில் 140 ரன்களில் வெளியேறினார். 

    இதற்கிடையே சதத்தை பூர்த்தி செய்த ரோகித் ஷர்மாவுடன் அம்பத்தி ராய்டு களமிறங்கினார். இருவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். முடிவில் இந்திய அணி 42.1 வது ஓவரில் 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 152 ரன்களுடனும், அம்பத்தி ராய்டு 22 ரன்களுடனும் இறுதியில் களத்தில் இருந்தனர். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  #INDvWI #ODI #ViratKohli #rohitsharma 
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்கள் எடுத்துள்ளது. #INDvWI #ODI #ViratKohli
    கவுகாத்தி:

    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி கவுகாத்தியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் துவங்கியது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிக பட்சமாக ஹெட்மயர் 106 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 38 ரன்னும் எடுத்தனர். இந்திய பவுர்கள் தரப்பில் சகால் 3, ஷமி , ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்துள்ளது. #INDvWI #ODI #ViratKohli
    அர்ஜென்டினாவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். PMModi #YouthOlympicGames2018
    புதுடெல்லி:

    அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் அக்டோபர் மாதம் 6-ம் தேதி இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி துவங்கியது. அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்த போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் வீராங்கனைகளை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர்களுடன் கலந்துரையாடி, வாழ்த்து தெரிவித்தார்.



    பிரதமர் மோடி மற்றும் இளைஞர் ஒலிம்பிக் வீரர்கள் இடையேயான இந்த சந்திப்பின்போது,  மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் உடன் இருந்தார். PMModi #YouthOlympicGames2018
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvWI #RishabhPant #TeamIndia
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடக்கிறது. 

    இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:- 

    விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பன்ட், டோனி(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாகல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.

    கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரிஷப் பன்ட், ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார். ஆடும் லெவனில் அவர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. 

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அதே உற்சாகத்தில், ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடும். 

    அதேசமயம், டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், கடுமையாக போராடும்.  எனவே, டெஸ்ட் போட்டித் தொடர் போன்று இல்லாமல், ஒருநாள் தொடரில் இந்திய அணி கூடுதல் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். #INDvWI #RishabhPant #TeamIndia
    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி நாளை கவுகாத்தியில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. #indvswi #odi #viratkohli

    கவுகாத்தி:

    ஜேகன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இரு அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல்அகமது ஆகியோர் உள்ளனர்.

    மிடில் ஆர்டர் வரிசையில் அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, ரி‌ஷப் பண்ட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குல்தீப் யாதவ், சாகுல் இருப்பதால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம்தான். இந்தியா வலிமையாக உள்ளதால் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர்ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.

    வெஸ்ட்இண்டீஸ் அணியை குறைத்து மதித்து விட முடியாது. அந்த அணி திடீரென்று எழுச்சி பெற்று சிறப்பாக விளையாட கூடியது.

    இதனால் இந்தியா எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். இப்போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரி‌ஷப் பண்ட், மனீஷ்பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது.

    வெஸ்ட்இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ். #indvswi #odi #viratkohli 

    மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #FCPuneCity
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி, எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில்  மும்பை மொடோ சுகோ முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, ரபெல் பாஸ்டோஸ் 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

    இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 2 போட்டிகளிலும் புனே அணி தோல்வியடைந்துள்ளது. #ISL2018 #MumbaiCityFC #FCPuneCity
    ×