என் மலர்

  நீங்கள் தேடியது "medal winners"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அர்ஜென்டினாவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். PMModi #YouthOlympicGames2018
  புதுடெல்லி:

  அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் அக்டோபர் மாதம் 6-ம் தேதி இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி துவங்கியது. அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

  இந்நிலையில், இந்த போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் வீராங்கனைகளை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர்களுடன் கலந்துரையாடி, வாழ்த்து தெரிவித்தார்.  பிரதமர் மோடி மற்றும் இளைஞர் ஒலிம்பிக் வீரர்கள் இடையேயான இந்த சந்திப்பின்போது,  மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் உடன் இருந்தார். PMModi #YouthOlympicGames2018
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரா ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #AsianParaGames #Modi
  புதுடெல்லி:

  இந்தோனேசியாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் குவித்து பதக்க பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தது. 

  இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். அப்போது, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற அனைவரையும் பிரதமர் மோடி வாழ்த்தினார்.   இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி ‘பாரா ஆசிய போட்டியில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் பாராட்டுக்குரியது. அவர்களின் மனவலிமை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்வதற்கு இவர்கள் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன். விளையாட்டு வீரர்கள் இன்னும் அதிக உயரத்தை எட்டுவதற்கு, நம்பிக்கை மற்றும் விடா முயற்சியை தொடர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். #AsianParaGames #MedalWinners #Modi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018

  சென்னை:

  ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, சுனாய்னா ஆகிய 3 வீராங்கனைகளும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

  இவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பதக்கம் வென்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து கடிதமும் அனுப்பி உள்ளார். #AsianGames2018

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #EdappadiPalaniswami
  சென்னை:

  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  இதே போல டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சரத் கமலுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

  3 வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  #AsianGames2018  #EdappadiPalaniswami

  ×