என் மலர்
செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் மோடியுடன் சந்திப்பு
பாரா ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #AsianParaGames #Modi
புதுடெல்லி:
இந்தோனேசியாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் குவித்து பதக்க பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். அப்போது, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற அனைவரையும் பிரதமர் மோடி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி ‘பாரா ஆசிய போட்டியில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் பாராட்டுக்குரியது. அவர்களின் மனவலிமை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்வதற்கு இவர்கள் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன். விளையாட்டு வீரர்கள் இன்னும் அதிக உயரத்தை எட்டுவதற்கு, நம்பிக்கை மற்றும் விடா முயற்சியை தொடர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். #AsianParaGames #MedalWinners #Modi
Next Story