என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து - புனே அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை
Byமாலை மலர்20 Oct 2018 12:01 AM GMT (Updated: 20 Oct 2018 12:01 AM GMT)
மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #FCPuneCity
மும்பை:
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி, எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் மும்பை மொடோ சுகோ முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, ரபெல் பாஸ்டோஸ் 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 2 போட்டிகளிலும் புனே அணி தோல்வியடைந்துள்ளது. #ISL2018 #MumbaiCityFC #FCPuneCity
Next Story
×