search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் திருட்டு"

    • மோட்டார் சைக்கிள் திருடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
    • கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி வீடுகளில் நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடும் நபர்களை பிடிப்பதற்காக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மறைமலைநகர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 22), விஜய் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • கரூர் லாலாபேட்டையை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39).
    • மகாதானபுரம் ரெயில்வே பிரிட்ஜ் அருகே சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    கரூர் ;

    கரூர் லாலாபேட்டையை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் ரெயில்வே பிரிட்ஜ் அருகே சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    அதிகாலையில் பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து செந்தில்குமார் லாலாபேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாதவரம் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.
    • மோட்டார் சைக்கிள்களை திருடுவது வியாசர்பாடி பாரதிநகரை சேர்ந்த விக்ரம் என்பது தெரிய வந்தது.

    மாதவரம் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இது தொடர்பாக மாதவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிள்களை திருடுவது வியாசர்பாடி பாரதிநகரை சேர்ந்த விக்ரம் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருடிய மோட்டார் சைக்கிளை புதுப்பேட்டையில் விற்று விடுவதாக தெரிவித்தார்.

    அவர் கொடுத்த தகவலின்படி திருட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிய புதுப்பேட்டையை சேர்ந்த குலா மொய்தீன், ஷேக் முகமது ஆகியோரும் சிக்கினர். கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தஞ்சை மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

    கோவை,

    விருதுநகர் அருப்பு க்கோட்டையை சேர்ந்தவர் யோகேஷ்வரன் (வயது 22). இவர் கோவை சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி பல் மருத்துவராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து யோகேஷ்வரன் சூலூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதே போன்று சூலூரை சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி (25) என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி திருடர்களை தேடி வந்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள் 2 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் அவர்களை படித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் இதேபோன்று வேறு ஏதாவது சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • இளைஞர்கள் சிலர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
    • போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற 2 வாலிபர்களை, மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பொதுமக்கள் உதவியுடன் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். நாகை மாவட்டம் சங்கரன்பந்தல் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ரதிஷ்குமார் (வயது25). இவர் காரைக்காலில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார். இவர் காரைக்கால் சிங்காரவேலர் சாலை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கு இளைஞர்கள் சிலர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டி ருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது 2 மர்ம நபர்கள் ரதிஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, கண் இமைக்கும் நேரத்தில் திருடி சென்றனர். இதனை பார்த்த ரதிஷ்குமார் சத்தம் போட்டார். தொடர்ந்து ரிதிஷ் குமார் அங்குள்ள பொது மக்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 2 வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் காரைக்கால் அம்மன்கோவில் பத்து, கூடல் வீதியை சேர்ந்த முத்துக்குமார் (26) மற்றும் திரு.பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த விக்ரம் மூர்த்தி (36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் 2 வாலி பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 

    • நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிள் எடுக்க வந்தார்.
    • காரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கரடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 31) இவர் அதே பகுதியில் உள்ள இவரது நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு நிலத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிள் எடுக்க வந்தார். அப்போது சாலை ஓரமாக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமானது. இதைப் பார்த்து அதிர்ச்சடைந்து இது குறித்து செல்வகுமார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    அதிர்ச்சி அடைந்த ஜீவா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் திருடி சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கனியாமூரிலிருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் ஜீவா என்பவர் கே. பி. கே சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் 10 கிலோ சிக்கன் வேண்டும் என ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் ஜீவாவிடம் தன்னுடைய வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டதாகவும் தங்கள் மோட்டார் சைக்கிளை கொடுங்கள் பெட்ரோல் வாங்கி வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

    மர்ம நபர் கூறியதை நம்பி கடைக்காரர் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து ள்ளார். வண்டியை பெற்றுக் கொண்ட மர்ம நபர் பெட்ரோல் வாங்கி கொண்டு சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் ஜீவா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று செல்போனை தேடி பார்த்த போது செல்போ னையும் திருடி சென்றது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த ஜீவா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் திருடி சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து மோட்டார் சைக்கிளையும், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நண்பர் உதவியுடன் வாலிபர்களை மடக்கி பிடித்தார்.
    • மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் தள்ளி கொண்டு செல்வதை பார்த்தார்.

    கோவை:

    கோவை ேக.ஜி சாவடி அடுத்த நவக்கரையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார்.

    மறுநாள் அதிகாலை அவரது நண்பர் பாபு என்பவர் ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் தள்ளி கொண்டு செல்வதை பார்த்தார். உடனே பாபு, ஈஸ்வரனுக்கு போன் செய்து மோட்டார் சைக்கிளை யாருக்காவது கொடுத்தாயா? 2 பேர் தள்ளி செல்கிறார்கள் என்றார்.இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தான் யாருக்கும் மோட்டார் சைக்கிளை தரவில்லை, அவர்களை பின் தொடர்ந்து போ நானும் வருகிறேன் என்றார். உடனே ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு நண்பர் பாபுவின் உதவியுடன் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தார்.

    பின்னர் அந்த வாலிபர்களை ேக.ஜி சாவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் தெலுங்குபாளையத்தை சேர்ந்த யாசுப் (வயது 27) மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த முகமது ஆசிப் (23) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஒரு வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றார். அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுபுள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (46). விவசாயி. இவர் சம்பவத்தன்று கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஒரு வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றார்.

    அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பஸ் ஸ்டாண்ட் எதிரே மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனை நடத்தினார்.
    • அப்போது அவ்வழியே வந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார்சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பியோட முயன்றான். போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் அரசு மருத்துவமனை, சட்டபேரவை, கடற்கரை, பூங்கா, விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடந்த 3 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது.

    ஒரே நாளில் 4,5 இடங்களில் வாகனங்கள் திருடப்பட்டது. கோரிமேடு, முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, பெரியகடை, ஒதியஞ்சாலை என நகரின் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வாகனங்கள் திருடப்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    ஒரே நபரே இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து திருடுபோன இடங்களுக்கு அருகில் இருந்த கண்காமிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அரசு மருத்துவமனை அருகே 40 வயதுடைய ஒரு நபர் முன்வாசலில் செல்வதும், பின்னர் பின்வாசல் வழியாக வந்து நோட்டமிட்டு, ஒரு வாகனத்தை திருடி செல்வதும் பதிவாகியிருந்தது.

    இதே நபர் பல்வேறு இடங்களில் வாகன திருட்டிலும் ஈடுபட்டது கேமரா பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நபரின் போட்டோவை வைத்து போலீசார் ரகசியமாக புதுவை முழுவதும் சோதனை நடத்தினர்.

    உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பஸ் ஸ்டாண்ட் எதிரே மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனை நடத்தினார்.

    அப்போது அவ்வழியே வந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார்சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பியோட முயன்றான். போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர். அப்போது அவன்தான் பலே வாகன திருடன் என தெரியவந்தது. விசாரணையில், அவன் வேலூர் மாவட்டம் ஆற்காடை சேர்ந்த சேகர் என்ற தனசேகர் (43) என்பதும், 3 மாதம் முன்பு வாகன திருட்டு வழக்கில் வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியவந்ததும் தெரியவந்தது.

    நாள்தோறும் வேலூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வரும் இவன், மக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்வான். எளிதில் திறக்க கூடியது, கூடுதல் பூட்டு போடாத வாகனங்களை தேர்வு செய்து திருடுவான். அதனை ஓட்டிச்சென்று புதுவை மாநில எல்லைகளில் நிறுத்தி விட்டு மீண்டும் பஸ்சில் ஏறி புதுவைக்கு வந்து மற்றொரு வாகனத்தை திருடுவான்.

    அதுபோல் ஒரே நாளில் 4 அல்லது 5 வாகனங்களை திருடிச் செல்வான். தமிழக பகுதியில் சாராயம் கடத்துவோரிடம் இந்த வாகனங்களை கிடைத்த விலைக்கு விற்று விட்டு இரவு சொந்த ஊருக்கு சென்று விடுவதை தினசரி வாடிக்கையாக வைத்திருந்த விசாரணையில் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையின்படி, தமிழகத்தில் பதுக்கிய 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    போலீசாரிடம் பலே திருடன், அனைத்து வாகன திருட்டையும் ஒரே வழக்காக பதிவு செய்து, விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். அப்போதுதான் நான் வழக்கை முடித்துவிட்டு வேறு ஊருக்கு செல்ல முடியும் என கூறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தக்க ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ள பலே மோட்டார்சைக்கிள் திருடன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதேவேளையில் திருடனுக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பது வாகனங்களை பறிகொடுத்தவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

    ×