search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகபூபா முப்தி"

    • ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருபவர்.
    • இங்கிலாந்து எம்.பி.யானபோது பக்வத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார்.

    இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியினர். பெற்றோர் வழி தாத்தாக்கள் அப்போதைய ஒன்றிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். ரிஷி சுனக் தந்தை யாஷ்வீர் சுனக், இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற மருத்துவர். தாய் உஷா சுனக் மருந்து கடை நடத்தி வந்தார். 1960 ஆம் ஆண்டு கென்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு ரிஷி சுனக் குடும்பம் குடி பெயர்ந்தது.

    ரிஷி சுனக் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். கர்நாடகாவில் உள்ள இன்போசிஸ் ஐ.டி.நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருகை தந்துள்ளார். யார்க்ஷயர் தொகுதி எம்.பி.யாக அவர் பதவியேற்ற போது கையில் பகவத் கீதையை கொண்டு சென்றிருந்தார். போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக அவர் இருந்தார்.

    இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்தின் இளம் வயது பிரதமராக பொறுப்பேற்கும் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவின் பலவேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இது ஒரு நல்ல செய்தி, உலகம் முழுவதும் இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் ரிஷி சுனக், அந்நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த அவருக்கு ஞானமும் வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 


     கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள பேட்டியில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதாகவும், இந்தியர்களின் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இன்று பல நாடுகளில் இந்தியர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது, ​​பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று ஐம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரிட்டன் பிரதமராக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில் மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    ஸ்ரீநகர்:

    மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.

    வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்து பார்க்க முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    • மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி.
    • மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். அவர், சமீபத்தில் சோபியானில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சுனில்குமார் பட் குடும்பத்தினரை சந்திக்க நேற்று திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் அங்கு செல்ல விடாமல் தடுத்து தன்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தனது வீட்டு கேட்டுக்கு பூட்டு போட்டிருக்கும் படங்களையும், வீட்டுக்கு வெளியே சி.ஆர்.பி.எப். வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கும் படங்களையம் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    அதில் அவர், 'மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது. ஏனெனில் அரசின் கொடூரமான கொள்கைகள், காஷ்மீரை விட்டு வெளியேற விரும்பாதவர்களை இலக்கு வைத்து கொலை செய்ய வழிவகுத்தது. எங்களை பிரதான எதிரியாக முன்னிறுத்துவதற்காகத்தான் நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டின் தலையெழுத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியும் பொறுப்பும் வாய்ந்த அரசின் முக்கிய துறையாக மத்திய நிதி அமைச்சகம் இருந்து வருகிறது. பல்வேறு மந்திரிகளின்கீழ் வரும் பலதுறைகளுக்கான நிதி நிர்வாகங்கள் அனைத்தையும் கண்காணித்து ஆண்டுதோறும் பாராளுமன்றத்தில் வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்யும் நம் நாட்டின் மத்திய நிதி மந்திரி பதவியை பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமித்து வந்துள்ளனர்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1970-71-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரேயொருமுறை இந்த நிதித்துறை இலாகாவை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். மற்றபடி இதுவரை நிதி அமைச்சகத்துக்கு வேறெந்த பெண்மணியும் மந்திரியாக நியமிக்கப்பட்டதில்லை.

    இந்த குறையை தீர்க்கும் வகையில் மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த பொறுப்பை ஏற்றதன் மூலம் ஆண்-பெண்ணுக்கு இடையிலான சரிநிகர் சமத்துவத்துக்கான பழைய அளவுகோல்களை எல்லாம் நிர்மலா சீதாராமன் தகர்த்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி இன்று குறிப்பிட்டுள்ளார்.
    மெகபூபா முப்தியின் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கி கொண்டது ஏன்? என்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். #AmitShah #AmitShahinjammu
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முதன்முறையாக இன்று இம்மாநிலத்துக்கு வந்துள்ளார்.

    ஜம்மு விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளம் முழங்க பா.ஜ.க. தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மாநில இளைஞர் அணியினர் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுக்க விமான நிலையத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அமித் ஷா, ஜன சங்க நிறுவன தலைவர் சியாமா பிரசாத் மூகர்ஜியின் நினைவுநாளையொட்டி மரியாதை செலுத்தினார்.

    பின்னர், கட்சி பிரமுகர்களுடன் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்திய அமித் ஷா, இன்று மாலை ஜம்மு நகரில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிக்ளின் குடும்ப ஆட்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த இரு குடும்ப கட்சிகள் இந்த மாநிலத்துக்கு செய்யாத பலவற்றை பா.ஜ.க. செய்துள்ளது,

    பஷ்மினா பகுதி வளர்ச்சிக்கு 40 கோடி ரூபாயும், பாம்போர் பகுதியின் வளர்ச்சிக்கு 45 கோடி ரூபாயும் நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். கடந்த ஆண்டில் நான் காஷ்மீருக்கு வந்தபோது இங்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த ஆட்சிக்கான ஆதரவை நாங்கள் விலக்கி கொண்டதால் இன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தங்களது ஆட்சி கவிழ்ந்தால் அரசியல் கட்சிகள் கவலை அடையும். ஆனால், பாரத் மாதா கி ஜெய் என்று கூறும் மனப்பக்குவம் பா.ஜ.க.வுக்கு மட்டுமே உண்டு. இது எங்களின் தேச பக்திக்கான அடையாளமாகும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒன்றிணைந்த சமமான வளர்ச்சி ஏற்படவில்லை என்றால் இங்கு பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் பலனில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்தும் ஜம்மு மற்றும் லடாக் விவகாரத்தில் மாநில அரசு பாரபட்சம் காட்டி வந்தது. இதனால்தான், கூட்டணி ஆட்சியில் இருந்து விலகி எதிர்கட்சியாக நின்று குரல் எழுப்ப நாங்கள் தீர்மானித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #AmitShah #AmitShahinjammu 
    ஜம்மு காஷ்மீரில் பிடிபி உடனான உறவை முறித்துள்ள பாஜக, கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்களை எடுத்துக் கூறியுள்ளது. #BJPDumpsPDP
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி அமைத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்த நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது. இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம், வன்முறை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் அங்கு ஆபத்தில் உள்ளது. சமீபத்தில், பத்திரிகை ஆசிரியர் புகாரி கொல்லப்பட்டது அதற்கு எடுத்துக்காட்டான ஒன்று. காஷ்மீருக்காக மத்திய அரசு அனைத்தையும் செய்தது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறலை தடுத்து நிறுத்த நாங்கள் முயன்றோம். ஆனால், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற பிடிபி முயற்சிக்கவில்லை.

    ஜம்மு லடாக் பகுதியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் பாஜக தலைவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 


    முப்தி முகம்மது சயீத் உடன் மோடி

    இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை கருதியும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒன்றினைந்த பகுதிதான் என்பதை நிலைநாட்டவும், அங்குள்ள நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு அதிகாரத்தை கவர்னரிடம் ஒப்படைக்க பாஜக தீர்மானித்துள்ளது.

    கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் எங்களது நடவடிக்கை தொடரும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடும் வகையில் கல்வீச்சு போன்ற சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். #JKgovt #115prisonersrelease
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது, தடையை மீறி பேரணி சென்றது போன்ற வழக்குகளில் கைதானவர்களை ரம்ஜான் பண்டிகைக்குள் விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதையடுத்து, கொடுங்குற்றம் அல்லாத சிறிய குற்றங்களுக்காக கைதான 115 பேரை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். #JKgovt  #115prisonersrelease
    ×