search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முப்பெரும் விழா"

    • தொழிலாளர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் திமுக அரசின் ஓராண்டு நிறைவு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் சமபந்தி போஜன முப்பெரும் விழா நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.

    இதில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி அன்புள்ள லாரன்ஸ் நகராட்சி ஆணையாளர் லதா, பொறியாளர் ஆசீர்வாதம், நகர கழகச் செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற அவைத்தலைவர் துரை சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், சாமுண்டீஸ்வரி, செந்தில்குமார், கே.எம்.பி பாபு, சங்கீதா, ரஷிதா, நந்தா தேவி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காதி மல்லி மாலையிட்டு புளி சாதத்துடன் மூன்றாம் கால பூஜை நடந்தது.
    • வீரசோழபுரம், பாப்பினி கிராம பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள பாப்பினி கிராமம்- மடவளாகத்தில் புராதன புகழ்பெற்ற ப்ருகன் நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரகுபதி நாராயணப்பெருமாள் ஆகிய கோவில்களில் வருடாந்திர சனிப்பிரதோஷம், மகாசிவராத்திரி, மாசி அமாவாசை ஆகிய முப்பெரும் விழா கடந்த 18ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி 20ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற்றது.

    விழாவில் கபாலீஸ்வரருக்கு பஞ்சகவ்யம் படைத்து சந்தனகாப்பு சாத்தி நீலப்பட்டு உடுத்தி தாமரை மலர் சூடி, வெண்பொங்கல் படைத்து பழங்களுடன் முதல் கால பூஜை நடைபெற்றது. பஞ்சாமிர்தத்துடன் அகில் காப்பு இட்டு, மஞ்சள் பட்டு அணிவித்து விவ்வம் மாலை சாத்தி, வடை பாயாசம் படையலிட்டு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. தேன் அபிஷேகம் செய்து சிவப்பு பட்டு உடுத்தி, காதி மல்லி மாலையிட்டு புளி சாதத்துடன் மூன்றாம் கால பூஜை நடந்தது.

    கரும்பு சாறு, ஜவ்வாது பொட்டு வைத்து வெண்பட்டு உடுத்தி நந்தியாவட்டம் மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வண்ணமலர் அலங்காரத்துடன் நான்காம் கால பூஜை நடைபெற்றது. மங்களவாத்தியம் முழங்க சிவாச்சாரியர்கள் உலக நலன் வேண்டி கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    பக்தர்கள் நமச்சிவாய நம என்று கோஷமிட்டனர். இரவு முழுவதும் அர்ச்சனை அபிஷேகம், நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து இன்னிசைக் கச்சேரிகள் நடைபெற்றன. கோவில் குலத்தவர்களான தோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய 4 குலத்தவர்கள் உட்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக்குழு தலைவர் எஸ். தங்கமுத்து, செயலாளர் எம். ராமசாமி, பொருளாளர் அர்ச்சுணன், பாப்பினி அம்மன் கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், வாலசமுத்திரம் புதூர் பாலசுப்பிரமணியம் மற்றும் வீரசோழபுரம், பாப்பினி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நெற்குப்பை நூலகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கல்வி மற்றும் கலை அரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் சோ மேலெ நினைவு அரசு கிளை நூலகத்தில் குழந்தை கவிஞர் வள்ளியப்பா நூற்றாண்டு விழா, உங்கள் மாவட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி மற்றும் பரிசளிப்பு விழா, கலை மற்றும் கல்வி அரங்கம் அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.

    நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் புசலான் வரவேற்றார். சோமசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆத்திசூடி ஜெயராமன், மகிபாலன்பட்டி சாத்தப்பசெட்டியார், வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கல்வி மற்றும் கலை அரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் செயல் அலுவலர் கணேசன், மண்டலதுணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், இளநிலை உதவியாளர் சேரலாதன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், அலமேலு அழகப்பன், அருணாச்சலம், உமா வள்ளியப்பன், தேவி மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளை நூலக நல்நூலகர் விஜயா நன்றி கூறினார்.

    • மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, பெயர் பலகை திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி காரணம் பேட்டையில் முத்தமிழ் வனம் அமைந்துள்ளது. இதன் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, முத்தமிழ் வனம் பெயர் பலகை திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி பணிகள் குழு தலைவர் சோமு என்கிற பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் கூப்பிடு விநாயகர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சின்னச்சாமி, தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், கல்குவாரி உரிமையாளர்கள் சிவக்குமார், ராமகிரு ஷ்ணன், மகிழ்வனம் நிர்வாகிகள் விசை.

    பூபதி,உதயகுமார், கோடாங்கிபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், முத்தமிழ் மன்ற தலைவர் ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் தெள்ளார், ஊராட்சி ஒன்றியம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம், வாசிப்பு இயக்க திட்டம் தொடக்க விழா, மற்றும் புதிய நூலக திறப்பு விழா, ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். வட்டார வள மேற்பார்வையாளர் ஜெயசீலன், ஆசிரியர் பயிற்சிநர் தமிழ் நேசன், குருவள மைய தலைமை ஆசிரியர் மணி, ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தெள்ளார், வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன், கலந்து கொண்டு. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 22-23-ம் ஆண்டிற்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க, தெரியாத, அனைவருக்கும் எழுத்தும், எண்ணறிதல், வாக்காளர் உரிமை, சுற்றுச்சூழல் அறிதல், பணம் இல்ல பரிமாற்றம், இணைய வழி கல்வி, ஆகியவை குறித்து விழிப்புணர்வு துண்டு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ-மாணவிகள், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

    விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பச்சையப்பன், சரவணன், பள்ளி மேலாண்மை கல்வியாளர் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிரிஜா, கணினி ஆசிரியர் சுரேஷ், புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொறுப்பாளர் இந்துமதி, வாசிப்புத்திறன் இயக்க பொறுப்பாளர் விஜய் லட்சுமி, வந்தவாசி கிருஷ்ண கோச்சிங் சென்டர் சீனிவாசன், மற்றும் ஊர் பெரியவர்கள், பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 200-வது வருவிக்க உற்ற ஆண்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
    • 200 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி நகர், மல்லிகார்ஜூன சுவாமி மற்றும் பரவாசு தேவ சுவாமி திருக்கோவிலில் வள்ளல் பெருமானின் 200-வது வருவிக்க உற்ற ஆண்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

    மேற்படி விழாவில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மற்றும் பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து 200 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கோட்டை, மல்லிகார்ஜூனசுவாமி மற்றும் பரவாசுதேவசுவாமி திருக்கோவி ல் செயல் அலுவலர் ராஜகோபால், காலபைரவர் திருக்கோவி ல் செயல் அலுவலர் ஜீவானந்தம், காரிமங்கலம் ஆய்வர் செல்வி, தருமபுரி வழக்கு ஆய்வர் பெரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புனித அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபிக்கப்பட்டது.
    • முதல் திருப்பலி நிறைவேற்றி 80 ஆண்டுகள் நிறைவு

    கன்னியாகுமரி:

    வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டு விளை புனித அந்தோணியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழாவும், அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபித் தல் மற்றும் முதல் திருப்பலி நிறைவேற்றி 80 ஆண்டுகள் நிறைவு என முப்பெரும் விழா ஆலய வளாகத்தில் நடந்தது.

    புனித அந்தோணியார் 36 ஆண்டுகள் மண்ணில் வாழ்ந்தாலும், தம் அன்பான செயலாலும் நற்குணத்தாலும் நம் உள்ளங் களை கவர்ந்து கொண்டார். புனித அந் தோணியாரின் உடலின் சிறு பகுதியானது ரோம பேரரசின் உதவியுடன் ஆலயத்தை வந்தடைந்தது. திருப்பண்டத்துக்கு ஆடம் பர கூட்டு திருப்பலி கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமி ஜியுஸ், தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், முன்னாள் முதல்வர் அருட்பணி யாளர் ஹிலாரி, பங்குத் தந்தை சுரேஷ் பாபு, அருட்பணியாளர்ரபேல், முன்னாள் பங்கு தந்தை காலின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புனித அந்தோணி யாரின் திருப்பண்டம் ஸ்தாபிக்கப்பட்டது.

    திருபண்டம் இந்தியாவில் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே உள்ளது. குமரி மாவட் டத்தில் இங்கு மட்டும் தான் உள்ளது என் பது குறிப்பிடத்தக்கது அதைத்தொடர்ந்து திருப்பலியும் பின்னர் அனைவருக்கும் பாராட்டு விழாவும் நடந்தது. இதில் ஆலயம் புதுப்பிக்க நன்கொடை வழங்கிய அருள் ஆன்றனி மாசிலாமணி குடும்பத்தினருக்கு மற்றும் ஆன்றனி அருள்ராஜ் குடும் பத்தினருக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்ட னர். முன்னாள் ஆயர், பங்கு பெற்ற நிர்வாகிக ளுக்கும் முன்னாள் பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப் பட்டது ஆலயத்தில் சிறப் பாக பணிபுரிந்த வர்களுக்கு தாசன் சூசை மரியான் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    திருபண்டம் வருவதற்கு உழைத்த பங்கில் உள்ள அனைத்து மக்களையும் முன்னாள் ஆயர் மற்றும் பங்கு தந்தையர் பாராட்டினர். தொடர்ந்து அன்பின் விருந்து நடந்தது.

    நிகழ்ச்சியில் முன்னாள் பங்கு தந்தையர்கள் அருள் சகோதரிகள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை சுரேஷ் பாபு, பங்குபே ரவை உதவி தலைவர் மரிய ஆன்றனி, செயலாளர் புஷ்ப லதா, துணைச் செயலாளர் லீமா ரோஸ், மரிய செபஸ்தி யான் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பக்த சபைகள் இணைந்து செய்து இருந்தனர்.

    • மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும்
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் வள்ள லார் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக குமரி மாவட்ட அறநிலையத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் நேற்று வள்ளலார் முப்பெரும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுவிதா பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமயங்கள், மதங்களின் அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்தி ஒரு கூட் டம் வளர்ந்து வந்தது. அதை எதிர்த்தவர் வள்ளலார். ஆனால் இன்றைய உலகில் பொறாமையும், பகைமையும் வளர்ந்து வருகிறது. கடவுளை யும், இயற்கையையும் நேசிக்க வேண்டும். ஆனால் இப் போது கடவுளின் பெயரால் இயற்கையை அழிக்கிறோம்.

    அனைத்து மதங்களும், சமயங்களும் அன்பையும், நீதியையும்தான் போற்று கின்றன. அனைவரும் சமம். அன்பு ஒன்றுதான் இந்த உலகில் நிலையானது. வள்ள லார் கூறிய பல சித்தாந்தங் கள் இப்போது மிகவும் அவ சியமாகிறது. அமைதியும், நீதியும்தான் மக்களை நல்வ ழிப்படுத்தும் தற்போது சிலர் மக்கள் மத்தியில் வெறுப்பு பிரசாரத்தை மேற் கொண்டு வருகிறார்கள். குமரி மாவட் டத்தில் பரவி வரும் இந்த வெறுப்பு பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். நமது நாட் டில் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் செய்ய நினைப்பவர்களின் முயற் சியை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    விழாவில் கலெக்டர் அர விந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்ற தலை வர் சவுந்தர்ராஜன், வடலூர் வள்ளலார் உலக மய தலை வர் சூரியமூர்த்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் தங்கம், அறநிலையத்துறை பொறியாளர்ராஜ்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராணுவ வீரர் சிலை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
    • ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பள்ளியின் விக்டரி அணி தட்டி சென்றது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, ராணுவ வீரர் சிலை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

    விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக காளம் பாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி பங்கேற்று விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். விளையாட்டு விழாவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பள்ளியின் விக்டரி அணி தட்டி சென்றது. தொடர்ந்து நடந்த ஆண்டுவிழாவில் பள்ளி நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளி அறங்காவலர் விஷ்வநாத் வரவேற்றார். பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சர்லின் ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினாராக பங்கேற்ற முன்னாள் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கலியமூர்த்தி ராணுவவீரரின் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பள்ளி மாணவ துணைத்தலைவர் ஹரிஹரன் நன்றி கூறினார். 

    • வள்ளலாரின் முப்பெரும் விழா கடந்த அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • மேலும் தலைமை எழுத்தரை 73588 90203 என்ற எண்ணிலும், பிரிவு எழுத்தரை 7708944642 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வள்ளலாரின் முப்பெரும் விழா கடந்த அக்டோபர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா நாகர்கோவிலில் உள்ள பெருமாள் திருமண மண்டபத்தில் 18-12-2022 அன்று நடைபெற உள்ளது.

    அதற்கு முன்னோடியாக குமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, இசைப் போட்டி, ஒப்புவித்தல் போட்டி, ஓவியம் வரைதல் போட்டி ஆகியன நாகராஜா கோவில் மண்டபத்தில் வருகிற 10-ந்தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

    போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை அலுவலக நேரத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் தலைமை எழுத்தரை 73588 90203 என்ற எண்ணிலும், பிரிவு எழுத்தரை 7708944642 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியாயார் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தினம், புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்ல பாய்படேல் வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கே.வி.கே.ஆர். பிரபாகரன், தொழிலதிபர்கள் பிரான்சிஸ் பாண்டியன், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நூலினை தொழிலதிபர் நாகரத்தினம் வெளியிட்டார். அன்னை பாத்திமா கல்லூரி குழுமத்தலைவர் ஷா பெற்றுக்கொண்டார். இதில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்ற னர்.

    முடிவில் புலவர் சங்கரலிங்கம் நூல் ஏற்புரை மற்றும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • பாளை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்.

    நெல்லை:

    வள்ளலாரின் தர்மசாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்க விழா உள்பட முப்பெரும் விழாவை கொண்டாட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த விழாவை வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டான இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் அரசு விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பாளை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் வள்ளலார் புகழ் பற்றி பாடும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    ×