என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "book launch"

    • திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்ற ’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழா.
    • சுமார் 45-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு 'தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்' என்று சொல்லக்கூடிய 'டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்' (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் 'டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2' (Divine Miracles and Secrets - Part 2) புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், 'யோகா - பாகம் 1' (Yoga - Part 1) புத்தகம் மற்றும் 'சுக ஞானநந்தம்' (Suga Gnananantham) இசை ஆல்பமும் வெளியிடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் ஏ. நஜீரூல் அமீன், பிரபல திரைப்பட நடிகர் ராமகிருஷ்ணா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும், திரைப்படத்துறை, தொழில்துறை, விளையாட்டுத்துறை, விவசாயத்துறை, சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் என சுமார் 45-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியாயார் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தினம், புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்ல பாய்படேல் வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கே.வி.கே.ஆர். பிரபாகரன், தொழிலதிபர்கள் பிரான்சிஸ் பாண்டியன், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நூலினை தொழிலதிபர் நாகரத்தினம் வெளியிட்டார். அன்னை பாத்திமா கல்லூரி குழுமத்தலைவர் ஷா பெற்றுக்கொண்டார். இதில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்ற னர்.

    முடிவில் புலவர் சங்கரலிங்கம் நூல் ஏற்புரை மற்றும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • ஜம்புத்தீவு பிரகடனம் குறித்த நூல் வெளியீட்டு விழா-பொதுக்கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வாசலில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் அறிவித்த ஜம்புத்தீவு பிரகடனத்தை இந்திய சுதந்திரப் போராட்ட மாக மத்திய, மாநில அரசுகள் அறிவுப்புச்செய்ய வலியுறுத்தி சிவகங்கையின் அனைத்துசமூக மக்கள், அனைத்து சமூக அமைப்பு களின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

    இதில் பங்கேற்றவர்கள் 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் திருச்சியில் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் ஜம்பு தீவு பிரகடனத்தை அறிவித்தனர். இதனை மத்திய, மாநில அரசுகளின் பார்வைக்கு கொண்டு சென்று முதல் சுதந்திர போராட்டமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர் மேலும் ஜம்பு தீவு பிரகடனம் சம்பந்தப்பட்ட நூல் வெளியீட்டு விழா வும் நடைபெற்றது

    இவ்விழாவில் இளைய மன்னர் மகேஷ் துரை, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சி யப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குண சேகரன், நாகராஜன், மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள், இஸ்லாமிய தலை வர்கள், மூத்த கல்வியாளர்கள், பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சீமானை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிய அண்ணாமலை.
    • அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை.

    கோவை:

    கோவையில் தனியார் மருத்துவமனை தலைவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்பட அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொள்ள வந்த அண்ணாமலை முன்வரிசையில் அமர்ந்திருந்த சீமானை நோக்கி சென்று அவரை கட்டிப்பிடித்தார். இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதன் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    பொதுமேடைகளில் அண்ணாமலையும், சீமானும் ஒருவரையொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது அவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

    இவ்வாறு அரசியலில் எதிர், எதிர் துருவங்களாக உள்ள 2 தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொண்டபோது கட்டிப்பிடித்து அன்பை பரிமாறக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற கூற்றைப் போல், பொதுமேடைகளில் அரசியல் தலைவர்கள் ஒருவரைஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வதும், தனிப்பட்ட முறையில் நட்பு பரிமாறிக் கொள்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில்தான் அண்ணாமலை, சீமானின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ×