மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.
மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
Published on

மதுரை

மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியாயார் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தினம், புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்ல பாய்படேல் வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கே.வி.கே.ஆர். பிரபாகரன், தொழிலதிபர்கள் பிரான்சிஸ் பாண்டியன், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நூலினை தொழிலதிபர் நாகரத்தினம் வெளியிட்டார். அன்னை பாத்திமா கல்லூரி குழுமத்தலைவர் ஷா பெற்றுக்கொண்டார். இதில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்ற னர்.

முடிவில் புலவர் சங்கரலிங்கம் நூல் ஏற்புரை மற்றும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com