என் மலர்
நீங்கள் தேடியது "Triennial celebration"
- ராணுவ வீரர் சிலை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
- ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பள்ளியின் விக்டரி அணி தட்டி சென்றது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, ராணுவ வீரர் சிலை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக காளம் பாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி பங்கேற்று விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். விளையாட்டு விழாவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பள்ளியின் விக்டரி அணி தட்டி சென்றது. தொடர்ந்து நடந்த ஆண்டுவிழாவில் பள்ளி நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளி அறங்காவலர் விஷ்வநாத் வரவேற்றார். பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சர்லின் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினாராக பங்கேற்ற முன்னாள் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கலியமூர்த்தி ராணுவவீரரின் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பள்ளி மாணவ துணைத்தலைவர் ஹரிஹரன் நன்றி கூறினார்.






