search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னுரிமை"

    • 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
    • செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    உங்கள் தொகுதியில் முதல-அமைச்சர் திட்டத்தின் கீழ் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று எம்.எல்.ஏ. கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.

    மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

    அதன்படி, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. அதில், நாகப்பட்டினம் தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தோட்டக்கலை பயிர்களில் அதிக மகசூல் பெற நடவடிக்கை
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக் கம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 3 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள் ளது. நடவுப் பொருள் உற்பத்தி இனத்தின் கீழ் புதிதாக திசு வளர்ப்பு கூடம் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் மானியம் வீதம் ஒரு எண்ணத்திற்கு ரூ.20 லட்சம் நிதி இலக்கும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் திறந்த வெளி மகரந்த சேர்க்கை மூலம் காய்கறிகள் மற்றும் நறுமணப் பயிர்களின் விதை உற்பத்தி செய்ய ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வீதம் அரை ஹெக்டேருக்கு ரூ.17500 நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

    பரப்பு விரிவாக்க இனத்தின்கீழ், உயர் ரக காய்கறி குழித்தட்டு நாற்று மூலம் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி இலக்கும், பல்லாண்டு வாசனைத் திரவிய பயிர்களான நல்ல மிளகு, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் நடவு செய் திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 275 ஹெக்டேருக்கு ரூ.55 வட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

    அன்னாசி சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.26,250 மானியம் வீதம் 40 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் நிதி இலக்கும், கோகோ பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக் டேருக்கு ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் நிதி இலக்கும், இஞ்சி பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து நாற்பதாயிரம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

    நீர் ஆதார அமைப்பு உருவாக்குதல் இனத்தின் கீழ் தனிநபர் நீர் அறுவடை அமைப்பு ஒன்றிற்கு ரூ.75 ஆயிரம் மானியம் வீதம் மூன்று அமைப்பிற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நிதி இலக்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை இனத் தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.6,200 மானியம் வீதம் 500 ஹெக்டேருக்கு ரூ.6 லட் சம் நிதி இலக்கும் பெறப் பட்டுள்ளது. விவசாயி களுக்கான உள் மாநில அளவிலான தோட்டக்கலை சார்ந்த பயிற்சிக்கு விவசாயி ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 50 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம், மாநில அளவிலான பயிற்சிக்கு தலா ஒரு விவசாயிக்கு ரூ.10.500 வீதம் 10 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் மாவட்ட அள விலான கருத்தரங்கிற்கு ரூ.2 லட்சம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. தேசிய தோட்டக் கலை இயக்க திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இலக்கில் 80 சதவிகிதம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்க ளில் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும். விவசாயி கள் www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்ட கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
    • ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலும், சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார் கோவில் திட்டப் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, அலுவலக வேலை நாட்களில் நாளை வரை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி பயன்பெறலாம். தகுதியான பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8667350694, 8667756031 மற்றும் 8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 25-க்கும் மேற்பட்ட கடைகள், பயணிகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • புதிதாக பலர் தங்களுக்கு வளாகத்தில் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    நன்னிலம்:

    நன்னிலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலைய வளாகத்தில், 25-க்கும் மேற்பட்ட கடைகள், பயணிகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகள் ஏற்கனவே வளாகத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.புதிதாக பலர் தங்களுக்கு வளாகத்தில் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலைய வளாகம் பணிகள் முழுமையாக முடிவடைந்து இன்னும் திறக்கப்படாமல் உள்ளது வியாபாரிகளுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது. வாழ்வாதாரத்திற்கான வருமானமின்றி சிரமப்ப டுவதாக தெரிவித்து வருகி ன்றனர். எனவே உடனடியாக பஸ் நிலையத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாெமாழி கூறினார்.
    • நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தடி கொண்ட ஐயனார் திடலில் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. இயக்கத்திற்காக பல்லாண்டு உழைத்த தொண்டர்களை பாராட்டி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகஸே் பொய்யாெமாழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டிய ஒரு காலம் இந்த காலம். புதிய கல்விக் கொள்கை என்பது வரும் போது அதிலுள்ள சாராம்சங்களை எடுத்துக் கூறி நாம் ஏன் அதை எதிர்க்கின்றோம் என்பதை ஏற்கனவே நமது தமிழக முதல்வர் கூயுள்ளார்.

    தமிழக முதல்வர் தமிழகத்துக்கு தேவையான கல்விக் கொள்கையை உருவாக்க 13 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அதற்கான கூட்டம் கூட கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. மாதந்தோறும் சனிக்கிழமை அதற்கான கூட்டம் நடத்தப்பட்டு ஒரு ஆண்டு காலத்திற்குள் அதற்கான கொள்கையை வடிவமைக்க தமிழக முதல்வர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

    ஆசிரியர் தகுதிதேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டு காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். அதே போல் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

    தற்போது 13,331 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அனுமதியை முதல்வரிடம் பெற்றுள்ளோம். நிரந்தர பணி என்பது பெரிய செயல் திட்டம்.அதற்கான தேர்வை 5 முதல் 6 லட்சம் பேர் எழுதுவார்கள். இந்த பணிகள முடிய நான்கு அல்லது ஐந்து மாத காலங்கள் ஆகு. அதுவரை ஆரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாக கூடாது என்பதால் தான் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் தற்போது பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    13 ஆயிரத்து 331 ஆசிரியர்களில் 8 ஆயிரம் பேரை இந்த ஆணடு தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் நியமனம் செய்து விடுவோம். எஞ்சிய ஆசிரியர்களை அடுத்த ஆண்டுக்குள் பணி நியமனம் செய்வோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.  

    • விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
    • அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    திருப்பூர்,

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஒ.சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -

    தமிழகம் முழுவதும் 2021-22 ம் ஆண்டுக்கான பொதுத் தோ்வுகள் முடிவடைந்து விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.இதைத் தொடா்ந்து, 2022- 23 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

    இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவா்கள் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாா் கல்லூரிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கு முன்னுரிமை சான்றிதழ்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இந்தச் சான்றிதழ்களை சமா்ப்பிக்கும் மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் கலை, அறிவியல், கணினி போன்ற பாடப் பிரிவுகளில் சேர அனுமதிக்க வேண்டும்.அதேபோல, அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவா்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×