search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து டி20 தொடர்"

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் #BigBashT20League
    பிக் பாஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மெக்டேர்மோட் 43 பந்தில் 50 ரன்களும், பெய்லி ஆட்டமிழக்காமல் 53 பந்தில் 70 ரன்கள் அடிக்க ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது. கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி களம் இறங்கியது. ஆரோன் பிஞ்ச் 42 ரன்களும், ஹார்பர் 32 ரன்களும் சேர்த்தனர். முகமது நபி 26 ரன்களும், கிறிஸ்டியன் 13 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க மெல்போர்ன் ரெனேகட்ஸ் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ். #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் ஹீட் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பிரையன்ட் 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் கிறிஸ் லின் 55 பந்தில் 84 ரன்கள் விளாச பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ஹென்ரிக்ஸ் 57 ரன்னும், அவெண்டானோ 30 ரன்னும், சில்க் 46 ரன்களும் விளாச சிட்னி சிக்சர்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 165 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்.
    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டரை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற அடிலெய்டு பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் கேரி 40 பந்தில் 59 ரன்களும், கேப்டன் இன்கிராம் 43 பந்தில் 75 ரன்களும் விளாச அடிலெய்டு 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களம் இறங்கியது.

    வாட்சன் (28), பட்லர் (23), பெர்குசன் (47), ஜோ ரூட் (18) ரன்களில் வெளியேற சிட்னி தண்டர் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் #BigBashLeague
    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இனறு நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி தண்டர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், கேப்டன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    வாட்சன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 54 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். க்ரீன் 14 பந்தில் 26 ரன்கள் விளாச சிட்னி தண்டர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.


    மேத்யூ வடே

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் மேத்யூ வடே, ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். ஷார்ட் 39 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்களும், வடே 49 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 85 ரன்கள் குவித்தனர்.

    பெய்லி 10 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
    கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NewBankNote #Rs20BankNote
    புதுடெல்லி:

    கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை எனக் கூறி, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று அதிரடியாக அறிவித்தது. அத்துடன் இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்தது. புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

    அதன்பின்னர், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் என படிப்படியாக புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த ரூபாய் நோட்டுக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவங்களில், மாறுபட்ட அளவுகளில் வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் தற்போது கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



    2016 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் 4.92 பில்லியன் எண்ணிக்கையில் 20 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. மார்ச் 2018-ல் அது இரு மடங்காக உயர்ந்து, 10 பில்லியன் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இது மொத்த கரன்சி எண்ணிக்கையில் 9.8 சதவீதம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தவிர ஏற்கனவே நடைமுறையில் இருந்த மற்ற பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. #NewBankNote #Rs20BankNote

    டாக்காவில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் வங்காள தேசத்தை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #BANvWI
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. 

    டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லெவிஸ், ஷாய் ஹோப் இறங்கினர்.

    இதில் லெவிஸ் அதிரடி காட்டினார். அவர் 36 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    அவருக்கு ஷாய் ஹோ சிறிது ஒத்துழைப்பு கொடுத்து 23 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். நிகோலஸ் பூரன் 29 ரன்னில் அவுட்டானார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.



    வங்காள தேசம் சார்பில் ஷாகிப் அக் ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான், மொகமதுல்லா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியில் லித்தன் தாஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி வங்காள தேச வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், வங்காள தேசம் அணி 17 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பவுல் 5 விக்கெட்டும், பேபியன் ஆலன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 50 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #BANvWI
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்தது. மெல்போர்ன் அணியின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பெர்த் அணி 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 103 ரன்னில் சுருண்டது. கிளிங்கர் 28 ரன்களும், வில்லே 12 ரன்களும், கார்ட்ரைட் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மெல்போர்ன் அணி சார்பில் ரிச்சர்ட்சன், கிறிஸ்டியன் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் அணி களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் மெல்போர்ன் 17 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறிது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு ஹார்பர் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹார்பர் 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார். நபி 27 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்கள் குவித்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் 15.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2018-19 சீசன் இன்று தொடங்கியது. பிரிஸ்பேனில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

    முதன்முறையாக காய்ன் சுண்டப்படுவதற்குப் பதிலாக பேட் தூக்கிப்போடப்பட்டது. இதில் அடிலெய்டு அணி டாஸ் வென்று பந்து வீச்சு தொடங்கியது.

    அதன்படி பிரிஸ்பேன் ஹீட் அணியின் பிரெண்டன் மெக்கல்லம், பிரையன்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 4 ரன்னில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தார். பிரையன்ட் 22 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கிறிஸ் லின் 20 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் பெய்ர்சன் 13 பந்தில் 24 ரன்கள் சேர்க்க பிரிஸ்பேன் ஹீட் 19.4 ஓவரில் 146 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு அணியின் கேப்டன் அலெக்ஸ் கேரி, வெதரால்டு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வெதரால்டு 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி 46 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 70 ரன்கள் குவித்தார். வெல்ஸ் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 24 ரன்கள் சேர்க்க அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் இரண்டு கோடிக்கு மேல் ஏலம் போன அடிலெய்டு கேப்டன் இன்ங்கிராம் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் காய்ன் சுண்டுவதற்குப் பதிலாக இனிமேல் சுண்டப்படும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். #BigBash
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் டி20 லீக் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தொடர் டிசம்பர் - ஜனவரி மாதம் நடைபெறும். 2018-19 ஆண்டிற்கான தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    கிரிக்கெட் போட்டியில் ஸ்டம்பிற்கு மேல் வைக்கப்படும் பெய்ல்ஸ் (Bails)  மரக்கட்டையால் செய்யப்பட்டது. இதை வித்தியாசமாக காட்டுவதற்காக பிக் பாஷ் தொடரில், பெய்ல்ஸ் மீது பந்து மற்றும் எதாவது தாக்கினால் லைட் எரியும் வகையில் அறிமுகம் படுத்தப்பட்டது. பின்காலத்தில் சர்வதேச போட்டியிலும் இந்த பெய்ல்ஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.


    (கோப்புப் படம்)

    தற்போது போட்டி தொடங்கும்போது டாஸ் சுண்டப்படும். டாஸ் வெல்லும் அணி பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்யும். இந்நிலையில் பிக் பாஷ், டாஸ் சுண்டுவதற்குப் பதிலாக பேட்டை சுண்டுவதற்கு முடிவு செய்துள்ளது. வருகிற 19-ந்தேதி முதல் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்த இருக்கிறது.

    டாஸ் சுண்டப்படும்போது டெய்ல் விழுந்ததா? ஹெட் விழுந்ததா? என்பது ரசிகர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. இதனால் பேட்டை சுண்ட முடிவு செய்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடக்கிறது. இதில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். #IPL2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 11-வது சீசன் முடிந்து கடந்த மாதம் வரை வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறை நடைபெற்றது.

    இதில் தவான், டி காக் உள்பட பல்வேறு வீரர்கள் வேறு அணிக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் 2019 சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாடு வீரர்களையும் 8 அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்க இருக்கிறார்கள்.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடரின்போது அதிரடி காட்டிய இளம் வீரர் ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், ஜி ஜின்பிங் மற்றும் ஷின்சோ அபே உள்ளிட்ட உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். #G20summit #Modi
    புய்னோஸ் எய்ரேஸ்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
     
    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.



    இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இதற்கிடையே, அர்ஜென்டினாவில் இன்று நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.

    இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. #G20summit #Modi
    அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்குவது பயங்கரவாதம் என தெரிவித்துள்ளார். #G20summit #Modi #XiJinping
    புய்னோஸ் எய்ரேஸ்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
     
    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.



    இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், பயங்கரவாதமும், முற்போக்குத் தன்மையும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
    பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. #G20summit #Modi #XiJinping
    ×