என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BigBash T20 League"

    • முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 198 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.

    மெல்போர்ன்:

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் மற்றும் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ர ஹோபர்ட் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து 65 ரன்கள் எடுத்தார்.

    ஹோபர்ட் அணி சார்பில் ரிலீ மெரிடித் 3 விக்கெட்டும், ரிஷாத் ஹொசைன், பில்லி ஸ்டான்லேக் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் விளையாடிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 57 ரன் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    சிட்னி சிக்சர்ஸ் அணி சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஜோயல் டேவிஸ், மிட்செல் ஸ்டார்க், சீன் அபாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி, பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுவது 6வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் #BigBashLeague
    பிக்பாஷ் டி20 லீக் தொடரில் இனறு நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி தண்டர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், கேப்டன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    வாட்சன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 54 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். க்ரீன் 14 பந்தில் 26 ரன்கள் விளாச சிட்னி தண்டர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.


    மேத்யூ வடே

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் மேத்யூ வடே, ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். ஷார்ட் 39 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்களும், வடே 49 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 85 ரன்கள் குவித்தனர்.

    பெய்லி 10 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
    ×